மீண்டும் சதித்திட்டம், துரோகம் – அனுமதிக்க முடியாது என்றார் அன்வர்

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுடனான பழைய சர்ச்சையை மறந்துவிட்டதாகவும், அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் 2016-ல் கூறினார்.

இருப்பினும், மீண்டும் தனக்கு துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்த பின்னர், தனது சொந்த பாதையைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது என்று அன்வர் கூறினார்.

“2016, அவர் வந்தார், நான் பரவாயில்லை என்று இருந்தேன். உடனே மறந்துவிட்டு,  நாங்கள் தொடர்ந்தோம், நாட்டைக் காப்பாற்றுவோம் என்று, ஆனால் நான் ஒரு மனிதனாக காயப்பட்டிருக்கிறேன், புண்படுத்தப்பட்டிருக்கிறேன்.

“ஆனால், அவற்றை எல்லாம்விட நாட்டின் நலன்கள் முக்கியம். ஆனால் மீண்டும், மீண்டும், சதி மற்றும் துரோகத்தை அனுமதிக்க முடியாது. எனவே, இப்போது எனக்குப் பரவாயில்லை, அவர் அப்படியே இருக்கட்டும், தொடரட்டும், அதனால் நான் எனது பாதையை மாற்றிகொண்டேன்,” என்று மலேசியா கேஷட்’க்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

1998-இல், நாட்டின் துணைப் பிரதமராக இருந்த அன்வர், பாலியல் வழக்கு மற்றும் அதிகாரத் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் டாக்டர் மகாதீரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

1எம்.டி.பி ஊழலில் சிக்கியப் பிரதமர் நஜிப் ரசாக்கை வீழ்த்த, இரு தலைவர்களும் சில ஆண்டுகளுக்குப் பிறகு சமாதானம் ஆயினர்.

2018 பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானின் (பி.எச்.) வெற்றிக்கு இவர்களின் ஒத்துழைப்பு பங்களித்தது.

மகாதீர் பகிரங்கமாக அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாகக் கூறினார், ஆனால் இறுதியாக, அவருக்குப் பதிலாக அன்வரைப் பிரதமராக நியமிக்க அவர் விரும்பவில்லை என்று தெரியவந்தது.

அன்வர் பிரதமராக வருவதைத் தடுக்கும் முயற்சியில், பெர்சத்து கட்சி தலைவர், முஹைதீன் யாசின் பி.எச்.-லிருந்து கட்சியை வெளியேற்றினார். பி.எச். அரசாங்கம் வீழ்ந்தது.

இருப்பினும், அம்னோவுடன் ஒத்துழைக்க மறுத்த மகாதீர், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்தார்.

அரசியல் நெருக்கடி இறுதியாக முஹைதீனை மாட்சிமை தங்கியப் பேரரசர், முஹைதீனைப் பிரதமராக நியமித்தார், புதிதாக தேசியக் கூட்டணி அரசாங்கம் அமைத்தது.

பி.எச். தலைமையிலான எதிர்க்கட்சி, அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்ற முயன்றது, ஆனால் அன்வருக்கும் மகாதீருக்கும் இடையிலான பிரச்சனை அது நடக்காமல் தடுத்தது.

சமீபத்தில், பி.எச்.-இன் முன்னாள் தலைவரான மகாதிர், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், நாட்டை அன்வாரால் வழிநடத்த முடியாது என்று பகிரங்கமாகக் கூறினார்.

இதற்கிடையில், கடந்த செப்டம்பரில் கூறியதுபோல், பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு தனக்கு இன்னும் உள்ளது என்று அன்வர் வலியுறுத்தினார்.

‘அந்த செயல்முறை நடந்து வருகிறது. எண்ணிக்கை குறித்து எனக்கு உறுதியாகத் தெரியாத சூழ்நிலையில் மாமன்னரிடம் பேசுவது நியாயமற்றது, அதனால் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“அடுத்ததாக, நான் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தேன். இந்த நாடு ஒரு சிறந்த நாடாக உருவாகக்கூடியத் திறனைக் கொண்டுள்ளது.

“பல தவறுகள் நடந்துவிட்டன, இருப்பினும் நாம் இந்த நிலைக்கு முன்னேறியுள்ளோம், ஏனென்றால் மக்களின் துன்பங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.