டிஏபி : கிரிக் நாடாளுமன்றத்தை அம்னோவிற்கு விட்டுகொடுப்போம்

கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்புல்லா ஒஸ்மான் இறந்ததைத் தொடர்ந்து, அங்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், அம்னோ போட்டியில்லாமல் வெற்றிபெறுவதை உறுதிசெய்ய, அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

இடைத்தேர்தலின் போது, கோவிட் -19 தொற்றுநோய் பரவும் அபாயத்தைத் தடுப்பதற்கும் இது அவசியமாகிறது என்று அவர் மேலும் கூறினார்.

“ஹஸ்புல்லாவின் சேவைகளை அங்கீகரிப்பதற்கும், மலேசியா கடுமையான கோவிட் -19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலைகளில் இருப்பதனாலும், அம்னோவை எதிர்த்து எந்தக் கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடாது,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று மதியம், ஹஸ்புல்லா மாரடைப்பால் இறந்ததாக செய்தி வெளியானது.

இதற்கிடையில், பாகான் எம்.பி.யான லிம், ஹஸ்புல்லாவின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.