பத்து சாப்பியில் அவசரநிலை அறிவிப்பு, இடைத்தேர்தல் இரத்து

சபா, பத்து சாப்பியில் அவசரநிலை அறிவிக்க மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புக் கொண்டார்.

இன்று பிற்பகல் 4.00 மணிக்கு, பிரதமர் முஹைதீன் யாசினை இஸ்தானா நெகாராவில் சந்தித்தபிறகு, மன்னர் இதற்கு ஒப்புக்கொண்டார்.

“பிரதமரின் விளக்கத்தைச் செம்மைப்படுத்திய பின்னர், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், சுகாதாரத் தலைமை இயக்குநர் மற்றும் தேர்தல் ஆணையத் தலைவர் ஆகியோரின் ஆலோசனைக்குப் பின், பத்து சாப்பி இடைத்தேர்தலுக்கான தேதி இரத்து செய்யப்படுகிறது.

“கோவிட் -19 தொற்றின் நான்காவது அலை ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இடைத்தேர்தலுக்காக மற்றொரு தேதி பிறகு நிர்ணயிக்கப்படும்.

பத்து சாப்பி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அடுத்த திங்கட்கிழமை நடைபெற இருந்தது.