நஜிப் மகன் RM13.1 மில்லியன் வரி செலுத்த வேண்டும், நீதிமன்றம் உத்தரவு

நஜிப் ரசாக்கின் மகன், மொஹமட் நிஸார், 2011 தொடங்கி ஏழு ஆண்டு காலப்பகுதிக்கான நிலுவையில் உள்ள RM13.1 மில்லியன் வரித்தொகையைச் செலுத்த வேண்டுமென ஷா ஆலம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செப்டம்பர் 25-ம் தேதியிட்ட 14 பக்க எழுத்துப்பூர்வமான தீர்ப்பில், நீதித்துறை ஆணையர் ஜூலி லேக் அப்துல்லா, வருமான வரி சிறப்பு ஆணையரிடம் (எஸ்.சி.ஐ.டி) மேல்முறையீடு செய்வதற்கு முன், ஒரு நபர் முதலில் உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு (ஐஆர்பி) நிலுவையில் உள்ள வரிகளைச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் விவாதிக்கக்கூடிய சிக்கல்கள் எதுவும் இல்லை, மேலும் இதற்குக் கால அவகாசம் ஏதும் இல்லை என ஜூலி லேக் கூறியதாக, தி எட்ஜ் மார்க்கெட்ஸ் செய்தி போர்ட்டல் தெரிவித்துள்ளது.

நிஸார் மீது நேரடி தீர்ப்பைப் பெற, ஐஆர்பி விண்ணப்பத்துடன் தொடர்புடையது இது.

சட்டப்படி, வழக்குக்கான தரப்பினர் நேரடி தீர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம், நீதிபதி முழு விசாரணையையும் நடத்தாமல் ஒரு முடிவை வழங்க முடியும்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், நஜிப்பிற்கு எதிரான RM1.69 பில்லியன் மதிப்புடைய வரி வழக்குத் தாக்கல் தீர்ப்பில், ஐஆர்பி-க்கு நேரடி தீர்ப்பை வழங்கியதன் அடிப்படையில், தான் இந்த முடிவை எடுத்ததாக ஜூலி லேக் கூறினார்.

“மலேசிய அரசாங்கம் மற்றும் நஜிப் ரசாக் இடையிலான வழக்கிலும் இதே வாதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“எனவே, வருமான வரிச் சட்டம் 1967 (ஐ.டி.ஏ) இல் உள்ள விதிகள், நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறாததற்கான காரணத்தை விளக்கிய நீதிபதி அஹ்மட் அளித்த காரணத்தை நான் இங்குப் பயன்படுத்துகிறேன்,” என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்மத் பச்சேவின் எழுத்துப்பூர்வ முடிவின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி அவர் கூறினார்.