கோவிட் -19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 21-ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) செயல்படுத்தப்பட்டதாக மூத்த அமைச்சர் (தற்காப்பு துறை) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இலக்கு அமைக்கப்பட்ட திரையிடலை நடத்துவதற்கும், மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தைக் குறைப்பதற்கும் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் விளக்கினார்.
“தற்போது, கிளந்தானில் பல மாவட்டங்கள் மற்றும் துணை மாவட்டங்களில் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தரவுகள் கூறிகின்றன.
“இருப்பினும், மத நடவடிக்கைகள் தொடர்பான முடிவு மாநில அரசால் தீர்மானிக்கப்படும்,” என்று கோலாலம்பூரில் இன்று பி.கே.பி.பி மற்றும் மீட்புநிலை கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றின் வளர்ச்சி குறித்து, கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
நவம்பர் 22 முதல் டிசம்பர் 5 வரையில், சபா, பெனாம்பாங்கில் உள்ள கே அவென்யூ மெகா நகரத்தில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.டி.) செயல்படுத்துவதாகவும் இஸ்மாயில் அறிவித்தார்.
அலுவலகங்கள், தங்குமிடங்கள் மற்றும் கட்டுமான தளங்களில் உள்ள தொழிலாளர்கள் உட்பட இப்பகுதியில் சுமார் 400 பேர் இதில் ஈடுபடுவர்.
இதற்கிடையில், தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) மலாக்கா மற்றும் திரெங்கானுவில் நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி.-யை மீட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
அதேப்போல, கெடாவில், கூலிம் மாவட்டம் மற்றும் ஜொகூரில், கோத்த திங்கி & மெர்சிங் மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற இடங்களின் தவிர நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. மீட்டுக்கொள்ளப்படுகிறது.