கோவிட் 19 : சபாவைவிட சிலாங்கூரில் அதிகப் புதியப் பாதிப்புகள், 3 இறப்புகள்

இன்று மதிய நிலவரப்படி 1,041 புதிய கோவிட் -19 பாதிப்புகள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிலாங்கூரில் 402, சபாவில் 346 மற்றும் நெகிரி செம்பிலான் 121 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அதேவேளையில், 1,405 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்றைய 3 மரணங்களும் சபாவில் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 332-ஆக உயர்ந்துள்ளது.

திரெங்கானு, பஹாங், புத்ராஜெயா, மலாக்கா, சரவாக் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவசரப் பிரிவில் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 45 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

சிலாங்கூர், சபா மற்றும் நெகிரி செம்பிலானை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

கோலாலம்பூரில் 68, ஜொகூரில் 33, பேராக்கில் 29, பினாங்கில் 17, லாபுவானில் 12, கிளந்தானில் 7 மற்றும் கெடாவில் 6.

மேலும் இன்று, 3 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

பெஞ்ஜாரா ஜாலான் ஹராப்பான் திரளை – சிலாங்கூர், சுங்கை பூலோ சிறைச்சாலை; ஸ்காய் சொக்லட் திரளை – லாபுவான் ; கோத்த கிச்சில் திரளை – ஜொகூர், கோத்த திங்கி மாவட்டம்.