பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் மீதான தனது தாக்குதலை, பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் மொஹமட் அஸ்மின் அலியை ஆதரிப்பதன் மூலம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது வெளிப்படுத்தி வருகிறார் என பி.கே.ஆர் இளைஞர் (ஏ.எம்.கே.) விவரித்துள்ளது.
பக்காத்தான் ஹராப்பானின் (பி.எச்.) வீழ்ச்சியை நினைவுகூர்ந்த மகாதீரின் அறிக்கை தொட்டு, ஏ.எம்.கே. துணைத் தலைவர் தீபன் சுப்பிரமணியம், பி.எச். வீழ்ச்சிக்கும், அன்வர் பிரதமராகத் தவறியதற்கும் காரணமான ஷெரட்டன் நடவடிக்கையின் பின்னணியில் மகாதீர் தான் “சூத்திரதாரி” என்று பலர் நம்புவதாகக் கூறினார்.
“அன்வரைத் தாக்கிய மகாதீர் அறிக்கையின் நோக்கம், பி.எச்.ஐப் பிளவுபடுத்துவதும், முஹைதீன்-அஸ்மின் ஆட்சியில் இருப்பதை அமைதியாக ஆதரிப்பதற்குமான ஒரு முயற்சி என்றார் அவர்.
“பிஎச் அரசாங்கமாக இருந்தபோது மகாதீர் ஒருபோதும் உண்மையானவராக இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் முஹைதீன், அஸ்மின் மற்றும் ஹம்ஸா ஆகியோருக்கான அனைத்தையும் ஷெராடன் நடவடிக்கை வழி தொகுத்தார்.
“நஜிப் மற்றும் அன்வர் இருவரும், ஒரே நேரத்தில் நாட்டின் அரசியலில் இருந்து மறைந்து போவதை உறுதி செய்வதற்கான மகாதீரின் அரசியல் […],” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, பி.எச் மற்றும் பெர்சத்து சந்திப்பின் போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ பதிவுகள் கசிந்தது, மகாதீர் தீய எண்ணம் கொண்டிருப்பதற்கான சான்று என்றும் தீபன் குற்றம் சாட்டினார்.
அன்வர் மீதான மகாதீரின் வெளிப்படையான தாக்குதல், அந்தப் பி.கே.ஆர். தலைவர் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளார் என்பதைக் காட்டுகிறது என்றும் தீபன் சொன்னார்.
“… மாற்றங்கள் விரைவில் நடக்கும். பக்காத்தான் ஹராப்பானும் மற்றவர்களும் அன்வருடன் உறுதியாக நிற்க வேண்டிய நேரம் இது,” என்று அவர் மேலும் கூறினார்.