`எது நாட்டிற்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது – ஊழலா மதுபானமா?’

நாடு முழுவதும் மளிகைக் கடைகள் மற்றும் பல்வகைப் பொருள் விற்பனைக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கானத் தடையை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அஹ்மத் மர்சுக் ஷாரியின் அறிக்கையை <em>பெட்ரியோட்</em> (தேசபக்தி) தலைவர் மொஹமட் அர்ஷத் இராஜி கண்டித்தார்.

அடுத்த ஆண்டு அக்டோபர் முதல், கோலாலம்பூரில் இத்தடையை அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ள கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் (டி.பி.கே.எல்) முடிவைத் தொடர்ந்து இவ்வாறு கூறப்பட்டது.

ஊழலைக் கையாள்வதில் அதிகக் கவனம் செலுத்துமாறு, அஹ்மத் மர்சுக் மற்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா ஆகியோருக்குப் </strong><em>பெட்ரியோட்</em>  அழைப்பு விடுத்துள்ளது.

“எது மிகவும் தீமையானது – மது அருந்துவதா அல்லது ஊழலில் ஈடுபடுவதா? சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் மிகவும் தீங்கு விளைவிப்பது எது என்று அஹ்மத் ஷாரியிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம்? மலாய்க்காரர்களை அதிகம் ஈர்த்துள்ள குற்றம் எது?

[..] அன்னுவார், அஹ்மத் ஷாரி இருவரும் சொல்லுங்கள், இவை இரண்டில் முதலில் செயல்படுத்த வேண்டியது – மதுவுக்கு எதிரான தடையா அல்லது மலாய்க்காரர்களிடையே வேரூன்றி இருக்கும் ஊழலையா,” என்று அர்ஷத் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிமல்லாதவர்களின் விவகாரங்களில் அஹ்மத் மர்சுக் தலையிடுவதாகவும் அர்ஷத் விவரித்தார்.

“மக்கள், குறிப்பாக முஸ்லிமல்லாதவர்கள், முன்பு பாஸ் தலைவர்கள் கூறியதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

“முஸ்லிமல்லாதவர்களை, இஸ்லாமிய விவகாரங்களில், ஹுடுட் பிரச்சினை உள்ளிட்ட விதிகளுக்கு உட்படுத்தப்பட மாட்டோம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

“முஸ்லிமல்லாதவர்கள் தங்கள் மதம் அனுமதிக்கும் வரை, ஹலால் அல்லாத உணவை உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொடுத்த வாக்குறுதியைப் பின்பற்றத் தவறினால், அஹ்மத் மர்சுக் மற்றும் அவரது கட்சியை அது பாதிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று, கிளந்தான் பாஎஸ் இளைஞர் மன்ற உறுப்பினரான அஹ்மத் மர்சுக், மளிகை கடைகள் மற்றும் பல்வகைப் பொருள் விற்பனைக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கான தடையை, நாடு முழுவதும் பரவலாக்கும் வாய்ப்பை அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்று கூறினார்.