‘முஹைதின் அதிக விலை கொடுத்துதான் ஆக வேண்டும்’

தனது அரசாங்கத்தைப் பாதுகாத்துகொள்ள, பிரதமர் முஹைதீன் யாசின் ஓர் “உயர் விலையை” செலுத்தியாக வேண்டும், அவசரகால அறிவிப்பு முயற்சிகள் தோல்வியுற்றது உட்பட.

அரசியல் நேர்மை இல்லாததால், முஹைதீன் உயர்ந்த விலையைச் செலுத்த வேண்டியது கட்டாயமாகிப் போனது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டாக்டர் புவாட் சர்காஷி தெரிவித்தார்.

‘முதுகில் குத்தும் விளையாட்டு’ இல்லை என்றால், முஹைதீனின் பலவீனமான அரசாங்கத்தை நிலைநிறுத்த முடியும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“இந்த வாரம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பட்ஜெட் நிறைவேற்றப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா? நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு, நாடாளுமன்றக் கலைப்பு, முஹைதீன் மிகக் குறுகியக் கால பிரதமர் ஆவார், அநேகமாக ஒரு புதிய பிரதமர் நியமிக்கப்படலாம்,” என்று அவர் இன்று காலை தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்தார்.

முஹைதீனின் பிரச்சினை பலவீனமான அரசாங்கம், – ‘அரசு 113’ – என்று அவர் பிரதமருக்கு கிடைத்துள்ள ஆதரவின் எண்ணிக்கையை அவர் குறிப்பிட்டார்.

“ஆக, அவர் அதிகமான விலையைக் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது,” என்று அந்த முன்னாள் பத்து பஹாட் எம்.பி. கூறினார்.

இந்த வியாழக்கிழமை, 2021 வரவுசெலவுத் திட்டம் வாக்களிப்புக்குத் திறந்துவிடப்படும் போது, ​​அது ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்று, முஹைடின் மற்றும் பி.என். அரசாங்கத்திற்கு ஒரு சவால் காத்திருக்கிறது.

பெரும்பான்மை ஆதரவை இழந்தால், முஹைடின் பதவி விலக வேண்டிவரும், அரசாங்கம் கலைக்கப்படும்.

இதற்கிடையில், சிறப்பு விவகாரங்கள் (ஜாசா) திணைக்களத்தின் முன்னாள் தலைமை இயக்குநருமான புவாட், இன்றைய அரசியல் நெருக்கடியால் மக்கள் சோர்ந்து போயுள்ளனர் என்றார்.

எனவே, முஹைதீன் தனது ஆணவம் மற்றும் பழி வாங்கும் படலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, நேர்மையான அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் கூறினார்.