அமைச்சர் : தொழிற்சாலை, விடுதி, எஃப் & பி துறைசார்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் வேலை இழந்தனர்

வேலைவாய்ப்பு காப்பீட்டு திட்டத்தின் (இஐஎஸ்) பதிவுகளின்படி, 2020 ஜனவரி முதல் நவம்பர் 13 வரை, மொத்தம் 95,995 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் வரையில், அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காடாக இருந்தது, அதாவது 737,500 பேர் வேலையில்லாமல் இருந்தனர்.

நேற்று, கோல கெடா நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மான் இஸ்மாயிலின் கேள்விக்கு, மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணன் இவ்வாறு பதிலளித்தார்.

இந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர், தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் தங்கும் விடுதிகள், உணவு & பானம் (எஃப் & பி), கிடங்குகள் மற்றும் சில்லரை வியாபாரத் துறை சார்ந்த தொழிலாளர்கள்.

நிபுணத்துவத் தொழில்முறை, தொழில்நுட்பம், நிர்வாகம், சேவைகள் மற்றும் கட்டுமான சேவை துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஜெரண்டட் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் நஸ்லான் இட்ரிஸின் தனி கேள்விக்கு பதிலளித்த சரவணன்,

இது முந்தைய மாதத்திலிருந்து (741,600 வேலையற்றோர்) 0.1 விழுக்காடு அதிகரித்தது.

மேலும், வேலையில்லாதவர்களில் பெரும்பாலோர் இ.ஐ.எஸ் உதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜூலை முதல் “ஒவ்வொரு மாதமும்” வேலை இழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, ஜூன் மாதத்தில் மொத்த வேலை இழப்பு எண்ணிக்கை 18,579, ஜூலை (16,660) மற்றும் அக்டோபர் (7,310) ஆகும்.

இருப்பினும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான வேலையின்மை புள்ளிவிவரங்களை அவர் வழங்கவில்லை.