கோவிட் 19 : இன்று 970 புதியத் தொற்றுகள், நெகிரி செம்பிலானில் அதிகப் பாதிப்புகள்

நாட்டில், இன்று மதியம் வரையில், 970 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

புதியப் பாதிப்புகளில் பெரும்பாலானவை நெகிரி செம்பிலானில் (32.8 %) பதிவாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து சபா (30.2 %), சிலாங்கூர் (11.9 %) ஆகிய மாநிலங்களில் அதிகத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

நெகிரி செம்பிலானில், கிட்டத்தட்ட அனைத்து புதிய பாதிப்புகளும் (94.7 %) சிறைச்சாலை சம்பந்தப்பட்ட பக்தி திரளையில் இருந்து வந்தவை,

இதற்கிடையில், 2,348 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று, இந்நோய்த்தொற்றுக்கு நால்வர் பலியாகியுள்ளனர், சபாவில் இருவர், பினாங்கு லாபுவானில் தலா 1 மரணமும் நேர்ந்துள்ளன. ஆக, நாட்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 345-ஆக உயர்ந்துள்ளது.

அவசரப் பிரிவில் 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 47 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று பெர்லிஸில் புதியத் தொற்று எதுவும் பதிவாகவில்லை. மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

நெகிரி செம்பிலானில் 318, சிலாங்கூரில் 115, பேராக்கில் 80,  கோலாலம்பூரில் 44, லாபுவானில் 37, ஜொகூரில் 30, கெடாவில் 24, பினாங்கில் 14, கிளந்தானில் 8, சரவாக் மற்றும் பஹாங்கில் தலா 2, புத்ராஜெயா, திரெங்கானு மற்றும் மலாக்காவில் தலா 1.

மேலும் இன்று, 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளது. அவை :-

டி’பஜாரு திரளை – சபா, லாஹாட் டத்து மாவட்டம்; கங்சா திரளை – சிலாங்கூர், கோல லங்காட் மாவட்டம்; பத்து தூஜோ திரளை – ஜொகூர், பத்து பஹாட் மாவட்டம்; தஞ்சோங் பூங்கா திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், கெரெங்கேத் திரளை, திரெங்கானு, மாராங் மாவட்டம்.