‘எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அரசாங்கத்திற்கு ஒரு வழி உண்டு’ – ஜாஹித்

2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு, எதிர்க்கட்சி எம்.பி.க்களிடமிருந்து தேசிய கூட்டணி அரசாங்கம் (பி.என்.) ஆதரவு கேட்டுள்ளது என்ற பாவனையை அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அளித்துள்ளார்.

நேற்றிரவு, மலேசியா கேஸட்-க்கு அளித்த ஒரு நேர்காணலில், அஹ்மத் ஜாஹித், மக்களவையில் 220-ல், 111 எம்.பி.க்கள் மட்டுமே பி.என்.னுக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறினார்.

இறந்த எம்.பி.க்களைத் தவிர்த்து, வாக்களிக்க முடியாது என்று கூறிய எம்.பி.க்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அரசாங்கத்தைப் பாதுகாக்க பி.என்.னுக்குத் தேவைப்படும் 112 எண்ணிக்கையில் சில குறைந்துள்ளதாக அஹ்மத் ஜாஹித் கூறினார்.

“ஓர் அரசாங்கத்தை உருவாக்கத் தேவையான 112 எண்ணிக்கை குறைந்துவிட்டது.

“அத்தகையச் சூழ்நிலையில், நிச்சயமாக, ஆளும் அரசாங்கத்திற்கு, வெளியே இருக்கும் எம்.பி.க்களின் ஆதரவைப் பெற சில வழிமுறைகள் உள்ளன.

இன்று காலை, சுபாங் பி.கே.ஆர். எம்.பி. வோங் சென், எம்.பி.க்களின் வளங்கள் மற்றும் ஒதுக்கீடுகளுக்கு பிரதிபலனாக, சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பார்கள் என்று கேள்விப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசாங்க எம்.பி.க்களை விட மிகக் குறைந்த அளவிலேயே ஒதுக்கீடுகளைப் பெறுகிறார்கள்.

2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு கொள்கை அளவிலான வாக்கெடுப்பு, இன்று பிற்பகல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வியாழக்கிழமைக்குள், நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் கூறப்பட்டதில் சில மாற்றங்களைச் செய்ய ஓர் அறிக்கையை வெளியிடுவார் என்பது சாத்தியமில்லை.

“இதனை நிதியமைச்சரால் செய்ய முடியும் என்று நான் மிகவும் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

நேற்று இரவு, ஜாஹித் மற்றும் சில அம்னோ தலைவர்களும் நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸுடன் ஒரு சந்திப்பை நடத்தியுள்ளனர்.