2021 வரவுசெலவுத் திட்டத்தை நிராகரிக்க மஸ்லீ திட்டமிட்டுள்ளார்

இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில், 2021 வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்கப்போவதா முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் சுட்டிக்காட்டினார்.

அதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்றாலும், நாட்டின் கல்வியின் தலைவிதி இன்னும் “தெளிவற்ற” நிலையில் இருப்பதாக சிம்பாங் ரெங்கம் எம்.பி.யான அவர் தெரிவித்தனர்.

“இந்த உள்ளடக்கம் அனைத்தையும், தீவிரமாக கண்காணித்து, கவனம் செலுத்த வேண்டும்.

“பின்னர், வாக்களிப்பு நடைபெறும்போது, ஆதரிக்கலாமா வேண்டாமா என்பதை மற்ற எம்.பி.க்கள் தீர்மானிப்பதை இது எளிதாக்கும்,” என்று சுயேட்சை மக்கள் பிரதிநிதியான அவர் சற்றுமுன்னர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

‘கோவிட் -19 பட்ஜெட் அல்ல’

இந்தப் பட்ஜெட், கோவிட் -19 பட்ஜெட் அல்ல என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

“கல்வியின் தலைவிதியும் எதிர்காலமும் இன்னும் தெளிவற்றதாகவும், நிச்சயமற்றதாகவும் உள்ளன. இந்த விஷயத்தை எல்லாம் தீவிரமாக கவனிக்க வேண்டும்.

“நாட்டின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட எந்தவொரு முக்கியமான முடிவுகளையும் தீர்மானிப்பதற்கு முன்னர், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போன்ற பங்குதாரர்களுடன் கல்வியமைச்சு கலந்துபேசியதா என்ற எனது கேள்விக்குக் கல்வி அமைச்சரும் பதிலளிக்கவில்லை.

“இன்று வரை, பட்ஜெட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் அல்லது பெற்றோருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சியும் இல்லை.

“உண்மையில், சிற்றுண்டிசாலை வர்த்தகர்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் போன்ற கல்விச் சுற்றுச்சூழல் அமைப்பில் ஈடுபட்டுள்ள பல வர்த்தகர்கள் இந்தப் பட்ஜெட்டில் எந்த நன்மையும் பெறவில்லை,” என்று அவர் கூறினார்.