கோவிட் 19 : இன்று 935 புதியத் தொற்றுகள், 3 இறப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 935 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 2,555 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று, பதிவாகியுள்ள 3 மரணங்களும் சபாவில் நேர்ந்தவை. இதனைத் தொடர்ந்து, நாட்டில் கோவிட் -19 தொற்றிற்குப் பலியானவர் எண்ணிக்கை 348-ஆக உயர்ந்துள்ளது.

அவசரப் பிரிவில் 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 45 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மலாக்கா, பஹாங், மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று சபாவில், ஆக அதிகமான (326) புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சபா அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 161, நெகிரி செம்பிலானில் 158, பேராக்கில் 79, ஜொகூரில் 60, கோலாலம்பூரில் 59, கிளந்தானில் 28, கெடாவில் 24, பினாங்கில் 17, லாபுவானில் 13, புத்ராஜெயாவில் 5, சரவாக்கில் 4, திரெங்கானுவில் 1

மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

புளோக் 31 திரளை – சபா, தாவாவ் மாவட்டம்; சுங்கை ஊடாங் கட்டுமானப் பகுதி திரளை – கோலாலம்பூர், கெப்போங்; செங்கால் திரளை – கிளந்தான், கோத்தா பாரு & மாச்சாங் மாவட்டம்; கெமிலாங் திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம்.