பட்ஜெட்டை முதலில் நிறைவேற்ற அனுமதிக்குமாறு அன்வர் தனது சகாக்களைக் கேட்டுக்கொண்டார்

2021 வரவுசெலவுத் திட்டத்தில், பிரிந்திசை வாக்களிப்பு வேண்டாம் என்று அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டதாக பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

காரணம், நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் அறிவித்த புதிய சலுகைகளை நிராகரிக்க விரும்பவில்லை என்று அன்வர் கூறினார்.

இருப்பினும், ஒவ்வொரு அமைச்சின் செலவுகளையும் எம்.பி.க்கள் விவாதிக்கும்போது, குழு மட்டத்தில் பிரிந்திசை வாக்களிப்பு நடத்துமாறு தனது கட்சி கேட்கும் என்று அன்வர் உறுதியாகச் சொன்னார்.

பக்காத்தான் ஹராப்பான் எம்.பி.க்களைச் சந்தித்தப் பின்னர், தனது நடவடிக்கைகளை விளக்கிய அன்வர், அவரின் கூட்டணி இன்னும் தேசியக் கூட்டணி முன்வைத்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகதான் இருக்கிறது என்றார்.

“லிம் மற்றும் மொஹமட் இருவரும் வலுவான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அந்தப் பணியைக் கொடுங்கள், இப்போதைக்கு நாம் (பட்ஜெட்) தொடர அனுமதிக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இருவரும் இணங்கினர்,” என்று அவர், நேற்று மக்களவை லாபியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரிந்திசை வாக்களிப்பு வேண்டாம் என்ற முடிவு, அன்வரால் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்டது என்று வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.

அதைத் தொடர்ந்து, இந்த விஷயம் குறித்த இரண்டு மணி நேர சந்திப்பில், ‘சூடான’ விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

“நீண்ட நேரம் பிடித்தது, ஏனென்றால் அவர்களில் (எம்.பி.க்கள்) சிலர் அவரை (அன்வர்) அடித்துப் பேசினார்கள், சிலர் தற்காத்து பேசினார்கள்,” என்று கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு ஹராப்பான் எம்.பி. தெரிவித்தார்.

“அன்வாரின் முடிவு அனைவரையும் மிகவும் கடினமான நிலைக்கு ஆளாக்கியது,” என்று அவர் கூறினார்.

அமானா தலைவர் மொஹமட், பி.கே.ஆர். தலைவரிடம் “கோபமும் ஏமாற்றமும்” அடைந்தார், அதே நேரத்தில் டிஏபி இந்த முடிவில் “மிகவும் திருப்தியடையவில்லை” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், மக்களவையில் அவருக்குப் போதுமான பெரும்பான்மை இருக்கிறதா என்று கேட்டபோது, ​​”நேரம் வரும்போது அதைப் பற்றி பேசுவோம்,” என்றார்.