பெட்ரியோட் : கோவிட் -19 தொற்றின் போது, பி.எல்.கே.என்.-ஐ திரும்ப நடத்தத் தேவையில்லை

தேசியத் தேசபக்தி சங்கத்தின் (பெட்ரியோட்) தலைவர் மொஹமட் அர்ஷத் ராஜி, தேசியச் சேவைப் பயிற்சி திட்டத்தை (பி.எல்.கே.என்.) மீண்டும் நடத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு, கோவிட் -19 தொற்றைத் தொடர்ந்து, மிகவும் பொருத்தமற்ற நேரத்தில் செய்யப்பட்டுள்ளது என்றார்.

“காகிதத்தில் உள்ள நோக்கம் நல்லதாக இருந்தாலும், ​​சிறந்த மற்றும் மலிவான மாற்றுத் திறன்கள், நேரம் மற்றும் சாத்தியம் குறித்து தீவிரக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

“பி.எல்.கே.என். ஒரு நல்ல திட்டம் என்பதைப் பெட்ரியோட் ஒப்புக் கொண்டாலும், கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளப் பொருளாதார மற்றும் நிதி சிக்கல்களை நாடு எதிர்கொள்ளும் நேரத்தில் அதை மீண்டும் கொண்டுவருவது அவசியமில்லை,” என்று அர்ஷத் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், உயிரிழந்தது குறித்து ஏராளமான விமர்சனங்கள் உள்ளன என்றும் அர்ஷத் கூறினார்.

“தேசபக்தி உணர்வைத் தூண்டுவதில், பி.எல்.கே.என். சுமார் 80 % மதிப்பெண்ணை வெற்றிகரமாக அடைந்துள்ளது என ஆய்வுகள் காட்டினாலும், சமூகத்தில் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடையே நடத்தையில் முன்னேற்றகரமான மாற்றத்தை அது காட்டவில்லை,” என்று அவர் கூறினார்.

பி.எல்.கே.என். சிலரின் சகாக்களைச் செறிவூட்டலுக்கானது என்றக் குற்றச்சாட்டும் உள்ளது.

“இந்த விமர்சனத்திற்குத் தீர்வு காணும் வரை, பி.எல்.கே.என்.-ஐ நீட்டிக்க முடியாது,” என்றும் அர்ஷத் கூறினார்.