பள்ளிகளில் ஜாவி எழுத்து கற்றல் தொடரும், கல்வியமைச்சு முடிவு

கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி எழுத்தைக் கற்றுக்கொள்வது தொடர்பான முடிவில், நிலைத்திருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அந்தத் தீர்மானத்தின் மூலம், 2021 முதல் தேசிய வகைப் பள்ளிகள் மற்றும் தேசியப் பள்ளிகளில் ஜாவி கற்றல் தொடரும்.

ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்தும் முடிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது என்று துணைக் கல்வி அமைச்சர் முஸ்லிமின் யஹாயா தெரிவித்தார்.

இந்த முடிவு பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது என்றும் சில தரப்பினரிடமிருந்து ஆட்சேபனைகளைப் பெற்றது என்றும் பதிவுகள் கூறுகின்றன.

இது ஒரு பரபரப்பான பிரச்சினையாக மாறியதோடு, பி.எச். அரசாங்கத்தின் தோற்றத்தையும் பாதித்தது. பின்னர் அது, அக்கூட்டணியின் சரிவுக்கு வழிவகுத்ததோடு, தேசியக் கூட்டணி (பி.என்.) உருவாக்கத்திற்கும் காரணமானது.

“இது அமைச்சரவை எடுத்த முடிவு, அடிப்படையில் அமைச்சரவைத் தீர்மானித்த வழிமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம்,” என்று முஸ்லிமின் நேற்று மக்களவையில் கூறினார்.

முஸ்லிமின்னைப் பொறுத்தவரை, ஜாவி எழுத்து சில தரப்பினரால் விவரிக்கப்படுவதைப் போல எதிர்மறையானது அல்ல, அது கலை, பாரம்பரியம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் அம்சங்களைப் போற்றுவதற்கானது மட்டுமே.