ஊழல் வழக்கிலிருந்து கு நான் வெளியேற்றம், பெட்ரியோட் விளக்கம் கோருகிறது

முன்னாள் அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், தனது RM1 மில்லியன் ஊழல் வழக்கில் தொகை வழங்கப்படாமல் விடுவிக்கப்பட்டதில் (டி.என்.ஏ.ஏ) கோபமடைந்துள்ள தேசியத் தேசப்பக்தர் அமைப்பு (பெட்ரியோட்) அவ்வழக்கின் திடீர் முடிவு குறித்து விளக்கம் கோரியுள்ளது.

“இது மனசாட்சி கொண்ட, நீதியை மதிக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“செப்டம்பர் 2018 முதல், வழக்கைத் தொடர்ந்து வந்த டிபிபி, இந்த வழக்கில் புதிய முன்னேற்றங்களுக்கானக் காரணத்தைக் கூறினார், மேலும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு உயர் அதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றார்.

“வழக்கு ஏற்கனவே பாதுகாப்பு கட்டத்தை எட்டியிருக்கும் போது, நடவடிக்கைகளை நிறுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று பெட்ரியோட் தலைவர் பிரிட்கேடியர் ஜெனரல் முகமது அர்ஷத் ராஜி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“முதலில், குற்றச்சாட்டு தொடரப்படுவதற்கு முன்னர், ஒரு குற்றச்சாட்டைப் பெறுவதற்கான உறுதியான ஆதாரங்களை அரசு தரப்பு கொண்டிருக்க வேண்டும்.

“எனவே, சமீபத்தியப் புதிய முன்னேற்றங்கள் என்னவென்று தெரிந்துகொள்ள நாங்கள் கோருகிறோம். நடவடிக்கைகளை நிறுத்த அறிவுறுத்தியது யார் என்பதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்,” என்று அர்ஷத் மேலும் கூறினார்.

நேற்றைய முடிவைத் தொடர்ந்து, டி.என்.ஏ.ஏ-க்குப் பின்னால் உள்ள “புதிய வளர்ச்சியை” விசாரிக்கத் தொடங்குவதாக கூறிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), நீதிமன்றத்தின் தீர்ப்பு தெங்கு அட்னான் முழுமையாக விடுவிக்கப்பட்டார் என்று பொருள்படாது, ஏனெனில் அவர் மீது எப்போது வேண்டுமானாலும் குற்றம் சாட்டப்படலாம், அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (ஏஜிசி) அனுமதி கொடுத்தால் என்றும் அது விளக்கியது.

ரிஸா அஜீஸ் (முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வளர்ப்பு மகன்) மற்றும் முன்னாள் சபா முதல்வர் மூசா அமன் ஆகியோரின் வழக்குகளை (சலுகைகள் / பணமோசடி வழக்கு) மேற்கோளிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றங்கள் விடுவித்த இரண்டு பொது ஊழல் வழக்குகள் ஏற்கனவே இருக்கின்றன என்று அர்ஷத் கூறினார்.

“அந்த இருவரின் வழக்குகளும் வெளியேற்றப்பட்டதற்கான வெளிப்படையான காரணங்கள் எதுவும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு எதிராக, மக்கள் மத்தியில் ஏற்கனவே ஒரு பொதுவான அவநம்பிக்கை நிலவுகிறது, குறிப்பாக, ஆளும் கட்சிகளில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளைக் கையாளும் போது,” அர்ஷத் கூறினார்.

ஆக, இந்த வழக்கின் முடிவைப் போல, மீதமுள்ள நஜிப், அஹ்மத் ஜாஹித் ஹமிடி, ஈசா சமாட், போங் மொக்தார் ராடின் மற்றும் அஜீஸ் அப்துல் ரஹீம் ஆகிய ஐந்து மூத்த அம்னோ அரசியல்வாதிகள் மீதான நீதிமன்ற வழக்குகளும் ஒரு முடிவுக்கு வருமா, அல்லது இறுதிகட்டத்தில் திடீரென வெளியேற்றப்படுமா என்று மக்கள் கேட்க தொடங்கிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

“இதுவரை உயர் அலுவலகங்களில் நடந்த கையூட்டுகள் மற்றும் ஊழல்கள் மக்களுக்கு போதுமானது, நீதிமன்ற நடவடிக்கைகளில் வழக்குத் தொடரப்பட்ட குற்றவாளிகள் முறையாகத் தண்டிக்கப்படுவதை முழுமையாகப் பார்க்க அவர்கள் விரும்புகிறார்கள்.

“அரை மனதுடன் வழக்குத் தொடுப்பதும், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதியிலேயே வெளியேற்றப்படுவதும் மக்களின் வாயில் தவறான வார்த்தைகளுக்கு மட்டுமே வழி விடுகிறது, அதில் பெட்ரியோட் உறுப்பினர்களும் அடங்குவர்,” என்று அவர் கூறினார்.

கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள அரசியல்வாதிகள், பொதுமக்களுடன் சுதந்திரமாகக் கலந்துகொள்வது வெறுக்கத்தக்கது என்று அர்ஷத் கூறினார்.

“ஒரு குற்றவாளியான அரசியல்வாதி, பகிரங்க உரைகள் ஆற்ற அனுமதிக்கப்படுவதும், சிறப்பு விருந்தினர் என்ற வகையில் உபசரிக்கப்படுவதும் அருவருப்பான செயலாகும். ‘மலேசியா ஊழலின் உலகச் சாம்பியன்’ என்று <em>வாஷிங்டன் போஸ்ட் முன்னர் மேற்கோள் காட்டியதில் ஆச்சரியமில்லை என்றும் அர்ஷத் மேலும் கூறினார்.