பேராக் மாநில அரசாங்கத்தை அமைக்க, அம்னோவுக்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனப் பேராக் பெர்சத்து தெரிவித்துள்ளது.
மாநிலப் பெர்சத்து தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, இந்த விவகாரம் மத்திய தலைமையால் தீர்மானிக்கப்படும்.
“இதுவரை எந்த முடிவும் இல்லை, நாங்கள் இன்னும் மையத்திலிருந்து பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
“இந்த அறிவிப்பைப் பெர்சத்து பொதுச் செயலாளர், ஹம்சா ஜைனுதீன் வெளியிடுவார் என்று நான் நினைக்கிறேன்,” என்று மலேசியாகினிக்குப் பெயர் குறிப்பிட மறுத்த அந்த வட்டாரம் இன்று தெரிவித்துள்ளது.
“பேராக் மாநிலப் புதிய அரசாங்கம் அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் இடையேயான ஒத்துழைப்புடன் உருவாகும்,” என்ற அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் கூற்றுக்கு ஏற்ப இது இருப்பதாகத் தெரியவில்லை.
நேற்றிரவு, அஹ்மத் பைசல் அஸுமுவை பேராக் மந்திரி பெசார் பதவிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து, பெர்சத்து, தேசியக் கூட்டணி மூலம் பாஸ் உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று வலியுறுத்தினார்.
நேற்றிரவு அதன் தலைவர் முஹைதீன் யாசின் தலைமையில் நடைபெற்ற பெர்சத்து உச்சமன்றத் தலைமை கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஹம்சா கூறினார்.
ஹம்ஸாவின் அறிக்கையின் அடிப்படையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அம்னோவின் முயற்சிகளில் பெர்சத்து ஈடுபடாது என்ற தோற்றத்தை அது அளித்தது.
“ஆனால் எந்த அளவிற்கு அஹ்மத் ஃபைசல் மக்களவையில் இருப்பார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
“இந்த விஷயத்தில் மத்திய தலைமை இன்று மற்றொரு கூட்டத்தை நடத்தும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா, பெர்சத்து மற்றும் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்குமாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.