பேராக் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க, பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மூவரும் இன்று கோலாலம்பூரில் சந்திக்கவுள்ளனர்.
அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மலேசியாகினியிடம் அச்சந்திப்பைச் சற்றுமுன் உறுதிப்படுத்தினர்.
இருப்பினும், கூட்டம் குறித்த விரிவான தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை.
கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.
இதற்கிடையில், குனுங் செமங்கோல் சட்டமன்ற உறுப்பினரான ரஸ்மான் (பாஸ்), தன்னிடம் முழுமையான தகவல்கள் இல்லை என்றும், ஆறு அம்சக் கூட்டத்தை மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை எதிர்கொள்ளும் உத்தரவை தனது கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக பெறவில்லை என்றும், பாஸ் மத்திய தலைமையின் உத்தரவுக்காக இன்னும் காத்திருப்பதாகவும் ரஸ்மான் கூறினார்.
இதற்கிடையில், மூத்த அம்னோ தலைவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தச் சந்திப்பில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தன.