மூன்றாவது முறையாக எம்.பி. பதவியேற்பு, தோல்வியின் பிரதிபலிப்பு – சுல்தான் நஸ்ரின்

கோத்த தம்பான் சட்டமன்ற உறுப்பினர், சரணி மொஹமட்’டின் மூன்றாவது பேராக் மந்திரி பெசார் பதவியேற்பு விழா, 14-வது பொதுத் தேர்தல் (ஜிஇ 14) தோல்வியின் பிரதிபலிப்பு என்று பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் முஸுதீன் ஷா தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, இந்த மூன்றாவது பதவியேற்பு விழா, இதற்கு முன்னர் பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் நடந்தது இல்லை, இன்று இது ஒரு புதிய வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது.

“ஆனால், இது பெருமைப்பட வேண்டிய வரலாற்று செய்தியல்ல; நடக்கும் இதுபோன்ற விஷயங்கள் வெற்றியைக் காட்டிலும், தோல்வியின் பிரதிபலிப்பாகவே வரலாற்றில் பதிவு செய்யப்படும்,” என்று அவர் இன்று கோலா கங்சாரில், இஸ்தானா இஸ்கந்தாரியாவில் கூறினார்.

இன்று சரணியின் நியமனத்திற்கு முன்னர், பெர்சத்துவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அஹ்மத் ஃபைசல் அஸுமு இரண்டு முறை மந்திரி பெசராகப் பதவியேற்றார். முதலில் 2018-ம் ஆண்டில் ஜிஇ14-க்குப் பிறகு, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்றார். அவர் மீண்டும் இந்த ஆண்டு, மார்ச் மாதம் தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் தலைவராகப் பதவியேற்றார்.

கடந்த வாரம், பேராக் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறத் தவறியதால் அஹ்மத் ஃபைசல் வெளியேற்றப்பட்டார்.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், மக்கள் அவர்களை நம்பியதால் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களுக்கு பல்வேறு தேவைகளையும் சேவைகளையும் வழங்க இவர்களால் உதவ முடியும் என்றும் மக்கள் நம்புகிறார்கள் என்று சுல்தான் நஸ்ரின் கூறினார்.

அந்தச் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.என். அல்லது பி.எச். கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், மலாய்க்காரர்கள், ஒராங் அஸ்லி, சீனர்கள் மற்றும் இந்தியர்கள், அதே போல் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் புத்த சமயத்தை அல்லது வெவ்வேறு நம்பிக்கைகளைக் கடைபிடிக்கலாம், ஆனால் அனைத்து மகக்ளுக்கும் ஒரே தேவைகள், அதே துன்பங்கள், அதே நம்பிக்கைகள் உள்ளனவா, ஒரே மாதிரியன கவனத்தைதான் அவர்கள் ஈர்க்க விரும்புகின்றனர்.

“இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும், அமைதியான மற்றும் வளமான அரசை விரும்புகிறார்கள், நீதியைச் செயல்படுத்தும் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கும் அரசாங்கத்துடன், மக்கள் பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்,” என்று அவர் கூறினார்.