கோயில் சர்ச்சை : ம.இ.கா. ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறது, எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பு

எதிர்காலத்தில் கோயில்கள் இடிபடும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, ம.இ.கா. ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும் என்று அதன் துணைத் தலைவர் டி மோகன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி மற்றும் தன்னார்வத் தொண்டு ஆர்வலர்கள் உட்பட அனைத்து இந்திய தலைவர்களையும் ம.இ.கா. அழைக்கும் என்று அவர் கூறினார்.

“இந்தக் கோயில்களில் பெரும்பாலானவைப் பிரிட்டிஷ் காலத்தில் அல்லது சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்டவை. அவை அப்படியே அழிந்துபோக விடமுடியாது.

“ஆனால், தற்போது ம.இ.கா.வின் பிரச்சனை என்னவென்றால், தேசிய முன்னணி அரசாங்கத்தின் காலத்துடன் ஒப்பிடும்போது, தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் எங்களது ‘கைகள் கட்டப்பட்டுள்ளன’,” என்று அவர் கூறினார், இந்த விஷயத்தை விரிவாகக் கூற மறுத்துவிட்டார்.

கெடாவில் இரண்டு இந்து கோவில்கள் ஆறு மாதங்களுக்குள் இடிக்கப்பட்டது குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

மேலவை உறுப்பினருமான அவர், மந்திரி பெசார் (எம்.பி.) சனுசி நோரின் அறிக்கை ஏற்கத்தக்கது அல்ல என்றும் கூறினார்.

“அவரைப் போன்ற ஒரு எம்பி இருந்ததில்லை. ஒரு சிறுவனைப் போல நடித்து அறிக்கைகளை வெளியிடுகிறார்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, அங்கீகரிக்கப்படாத இடத்தில் கட்டப்பட்டது, சட்டத்தை மீறியது என்று காரணம் சொல்லி, கோல கெடாவில் ஒரு கோயில் இடிக்கப்பட்டது.

ம.இ.கா. தடை செய்யப்பட வேண்டும் என்றும், “சட்டத்தை மீற பொதுமக்களை தூண்டுகிறது” எனில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பினாங்கு துணை முதல்வர் I பி இராமசாமி, கெடாவில் உள்ள கோவிலை இடித்தது இந்திய சமூகத்தை ஓரங்கட்டும் நோக்கம் கொண்டது என்றும், ஓர் இனத்தின் கலாச்சாரத்தை ஒழிக்கும் முயற்சி என்றும் கூறினார்.

“இந்த நடவடிக்கை நீண்ட காலத்திற்கு முன்பு தொடங்கியது. நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டன.

“இது இந்து கலாச்சாரத்தையும் மதத்தையும் மெதுவாக ஒழிக்கும் செயல் என்று நான் நம்புகிறேன்,” என்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இப்பிரச்சினைக்கு இறுதி தீர்வைக் காண, ஒரு சட்டத்தை இயற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, இரு தலைவர்களும், டிசம்பர் 8-ம் தேதி, ஆஸ்ட்ரோ வானவில் ஏற்பாடு செய்திருந்த “கோவிலை இடிப்பு? யார் பொறுப்பு?” எனும் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

கோயில் பிரச்சினைகளைக் கண்காணிக்க, மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகளைக் கொண்ட ஒரு மையத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பதனையும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

“பினாங்கு தீவின் ‘இந்து அறப்பணி வாரியம்’ போல, (பினாங்கில் 13 கோயில்களை நிர்வகிக்கும் ஓர் அமைப்பு), நமக்கு ஒரு மைய அமைப்பு இருக்க வேண்டும்.

“முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்கள் (ரிபி) (RIBI – Rumah ibadat bukan Islam) ஒவ்வொரு மாநிலத்திலும் கோவில் பிரச்சினைகளைக் கண்காணித்து வருகின்றன. இருப்பினும், இன்னும் குறைபாடுகள் உள்ளன,” என்று இராமசாமி கூறினார்.