அண்மையில் எல்லையில் நடந்த கடத்தல் நடவடிக்கைகளில், ஊழல் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணையை நடத்த, புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார்.
பல குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், பெறப்பட்ட சில ஆதாரங்களைப் பரிசீலிக்கவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நாட்டின் எல்லைகளில் பணிபுரியும் பொது இயக்கப் படை (GOF) உறுப்பினர்களிடையே முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சொன்னார்.
“இந்த பிரச்சினை கடந்த ஆண்டு முதல் நீண்ட காலமாக நடந்து வருகிறது, தேசியப் பாதுகாப்பு கவுன்சிலைச் சேர்ந்த சில அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ வெளிவந்துள்ளது (அவர்கள் கடத்தல்காரர்களுடன்) சதி செய்வதாகக் கண்டறியப்பட்டது.
“இந்த நடவடிக்கைகளை நிறுத்த நான் ஆரம்பத்தில் இருந்தே எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளேன், இதிலிருந்து, இந்த மோசமான நடைமுறைகள் (GOF சம்பந்தப்பட்ட கடத்தல்) பற்றிய தகவல்களை எனக்கு அனுப்ப விருப்பமுள்ள, தைரியமான சிலர் முன்வந்துள்ளனர்.
“நாங்கள் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் நேற்று புக்கிட் அமானில் காவல்துறையினருக்குப் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.