கோவிட் 19 : இன்று 1,810 புதியத் தொற்றுகள், 6 இறப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,810 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 6 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளையில், 937 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் 53.2 விழுக்காடு பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், சபா (29.4 %) மற்றும் பஹாங் (5.3 %) உள்ளன.

ஒட்டுமொத்தமாக, நாட்டில் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை 80,309-ஐ எட்டியுள்ளது. அதேவேளையில், சீனாவில் தற்போது கோவிட் -19 தொற்றின் எண்ணிக்கை 86,688 ஆக உள்ளது.

நாட்டில் இன்று அறுவர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். ஐவர் சபாவிலும் ஒருவர் பினாங்கிலும் என பதிவாகியுள்ளது. ஆக, நாட்டில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கை 402 எனப் பதிவாகியுள்ளது.

அவசரப் பிரிவில் 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 63 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 829, சபாவில் 532, கோலாலம்பூரில் 132, பஹாங்கில் 96, ஜொகூரில் 69, நெகிரி செம்பிலான் 64, பினாங்கில் 34, கெடாவில் 22, பேராக்கில் 12, லாபுவானில் 8, மலாக்காவில் 5, புத்ராஜெயா, திரெங்கானு மற்றும் கிளந்தானில் தலா 2, சரவாக்கில் 1.

மேலும் இன்று, 6 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

ஒரு தொழிற்சாலை சார்ந்த சுங்கை புத்துஸ் திரளை – சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம்; எரிமா திரளை – சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம்; லங்காசுக்கா திரளை – ஜொகூர், கூலாய் & ஜொகூர் பாரு மாவட்டங்கள்; ஜாலான் கோலேஞ் திரளை – நெகிரி செம்பிலான், சிரம்பான் & சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டங்கள்; ஜாலான் பெராங்கான் கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய், தித்திவங்சா & கெப்போங் மாவட்டங்கள்; சுங்கை கெலுவாங் திரளை – பினாங்கு மாநிலத்தில் சில பகுதிகள்.