அடுத்த வாரம், தேசிய முன்னணியும் தேசியக் கூட்டணியும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, பல விஷயங்களைப் பற்றி விவாதிக்கும்; குறிப்பாக, அடுத்தப் பொதுத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேசும் என்று தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா தெரிவித்தார்.
தலைநகரில் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில், இரு தரப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அன்வார் கூறினார்.
இதற்கிடையில், அம்னோ மற்றும் பாஸ் சம்பந்தப்பட்ட ‘முவாஃபாகாட் நேஷனல்’ , தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகப் பதிவு செய்யப்படாது என்றும் அவர் விளக்கினார்.
“‘முவாஃபாகாட் நேஷனல்’ வழிநடத்தல் குழு, கடந்த வாரம் அதன் ஒத்துழைப்பைத் தொடர ஒப்புக்கொண்டது. இதனைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அம்னோ ஏற்கனவே தேசிய முன்னணியிலும் பாஸ் தேசியக் கூட்டணியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“தேர்தலில், அம்னோ தேசிய முன்னணி சின்னத்தையும் மற்ற பங்காளிக் கட்சிகள் தேசியக் கூட்டணி சின்னத்தையும் பயன்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
- பெர்னாமா