`டோப் கிளவ்` கையுறை தொழிற்சாலை பாதுகாவலர் மரணம், கோவிட்- 19 காரணமாக இருக்கலாம்

கடந்த சனிக்கிழமையன்று, கோவிட் -19 தொற்றின் விளைவாக கிள்ளான் மேருவில் உள்ள டோப் கிளவ் தொழிற்சாலையின் நேப்பாள பாதுகாவலர் ஒருவர் இறந்தார் என நம்பப்படுகிறது.

இறப்பதற்கு முன்னதாக, நவம்பர் 21-ம் தேதி, யாம் நாராயண் சவுத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுமார் மூன்று வாரங்களுக்குச் சிகிச்சை பெற்றார் என்று வைப்ஸ் போர்டல் தெரிவித்துள்ளது.

யாம் ஒரு பாதுகாப்பு நிறுவனம் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாதுகாவலராகப் பணியாற்றியதாக நம்பப்படுகிறது.

தொழிலாளர்கள் தங்கும் இடங்களின் நிலைமைகளை வெளிப்படுத்தியதால், டோப் கிளவ் ஒரு வெளிநாட்டு தொழிலாளியைப் பணிநீக்கம் செய்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து, இந்த அறிக்கை வந்துள்ளது.

கடந்த மே மாதம், யுபராஜ் கட்கா, உலகின் மிகப்பெரிய இரப்பர் கையுறை உற்பத்தியாளரான டோப் கிளவ் தொழிற்சாலையில், நெரிசலில் சிக்கிய தொழிலாளர்களின் இரண்டு படங்களை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இரவு வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, வெப்பநிலை சோதனை செய்ய பல தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் வரிசையில் நிற்பதை அந்தப் படம் காட்டியது.

தொழிலாளர்கள் கையுறைகள் மற்றும் முகக்கவரிகளைக் கட்டாயம் அணிய வேண்டும், இருப்பினும் தொழிற்சாலைக்கு வெளியே சமூக இடைவெளியைச் செயல்படுத்தப்படவில்லை அல்லது கடைப்பிடிக்கவில்லை என்று யுபராஜ் மற்றும் ஐந்து தொழிலாளர்கள் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளனர்.

நிர்வாகத்திடம் நேரடியாகப் புகார் அளித்தால் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற கவலையில், 27 வயதான அவர் ஒரு படத்தை நேப்பாளத்தில் உள்ள ஒரு தொழிலாளர் உரிமை அமைப்புக்கு அனுப்பியுள்ளார். அப்படம் பின்னர் ஒரு மலேசிய நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது, படத்தை எடுத்த நபரை வெளிப்படுத்தாமல்.

இருப்பினும், செப்டம்பர் 23-ம் தேதியன்று, அப்படத்தைப் பரப்பியக் காரணத்திற்காக யுபராஜ் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார்.

அந்தக் கடிதத்தில், சிசிடிவி காட்சிகள் மூலம் அப்படத்திற்குக் காரணமான நபராக தனது தரப்பு அவரைக் கண்டறிந்தது என்று டோப் கிளவ் நிறுவனம் கூறியுள்ளது.

மலேசியாவில், ஆக அதிக கோவிட்-19 நேர்வுகளைப் பதிவு செய்த திரளையாக, சிலாங்கூர், கிள்ளானில் உள்ள தெராத்தாய் திரளை விளங்குகிறது. இதுவரை அங்குப் பணிபுரிந்த 5,450 தொழிலாளர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு விஷயங்கள் குறித்து, கருத்து தெரிவிக்க மலேசியாகினி டோப் கிளவ்