முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 16 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், கைக்கடிகாரங்கள் மற்றும் 27 கார்கள் உட்பட பல்வேறு <em>பிரேண்டுகள்</em>
கொண்ட நூற்றுக்கணக்கான கைப்பைகளைக் கோரி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மூன்றாம் தரப்பினர் யாரும் இன்று வரவில்லை.
இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைக் கோர விரும்பும் மூன்றாம் தரப்பினர், இன்று நீதிமன்றம் வரலாம் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது என துணை அரசு வழக்கறிஞர் ஃபாதின் ஹட்னி கைருடின்ன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“முன்னதாக, மூன்றாம் தரப்பினர் ஒருவர் நீதிமன்றத்தைத் தொடர்பு கொண்டிருந்தார், (பறிமுதல் செய்யப்பட்ட சொத்து மீதான உரிமைகோரல் தொடர்பாக) நீதிமன்றம் அவர்களை இன்று ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டது; ஆனால், இன்று காலை 11 மணி வரை எந்த மூன்றாம் தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை,” என்று உயர்நீதிமன்றத்தின் துணைப் பதிவாளர் கேத்தரின் நிக்கோலஸ் முன்னிலையிலான வழக்கு நிர்வாகத்திற்குப் பின்னர் அவர் கூறினார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை, 2021, மார்ச் 26-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஃபாதின் ஹட்னி தெரிவித்துள்ளார்
-பெர்னாமா