பேராக் சுல்தானை ஹாடி அவாங் எதிர்கொண்டார்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று காலை, இஸ்தானா கிந்தாவில் பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்தித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி, சுல்தான் நஸ்ரின் பாஸ் கட்சியின் அரசியல் சூழ்நிலையை விளக்குமாறு கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, ஹாடி இன்று அரண்மனைக்குச் சென்றார்.

டிசம்பர் 8-ம் தேதி, உத்தரவிட்டபடி சுல்தானை எதிர்கொள்ளாததற்காகக் கட்சியைச் சேர்ந்த மூன்று மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த தவறுக்கு, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11) பேராக் பாஸ் தலைவர் ரஸ்மான் ஜகாரியா சுல்தான் நஸ்ரினிடம் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 10- ம் தேதி, கோலகங்சார், இஸ்தானா இஸ்கந்தாரியாவில் நடந்த ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா பட்டியலில், ​​பாஸ்-ஐச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லை, அதற்குப் பதிலாக நான்கு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெர்சத்துவில் இருந்து ஒருவரின் பெயர் மட்டுமே அதில் இருந்தது.

சுல்தான் நஸ்ரினைச் சுமார் 40 நிமிடங்கள் எதிர்கொண்ட பின்னர், அங்கிருந்து வெளியேறிய ஹாடி அவாங், அரண்மனைக்கு வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்களைச் சந்திக்கவில்லை.

  • பெர்னாமா