மக்களவை | இன்று, மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு, 2021 வரவு செலவு திட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பிரிந்திசை வாக்கெடுப்பு மூலம் 111 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 108 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர், மற்றொருவர் வரவில்லை.
வராத நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸலீ ஹம்சா (பி.என். – குவா மூசாங்) என்று நம்பப்படுகிறது.
விநியோக மசோதா, இனி மேலவையில் விவாதிக்கப்பட்டு வாக்களிக்கப்படும்.
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (கெரிக் மற்றும் பத்து சாப்பி) இறந்ததைத் தொடர்ந்து, மக்களவையில் இப்போது 220 உறுப்பினர்கள் உள்ளனர். எளிய பெரும்பான்மைக்கு 111 வாக்குகள் தேவை.
முன்னதாக, கல்வி அமைச்சுக்கும், உயர்கல்வி அமைச்சுக்குமான செலவுகள் குரல் வாக்களிப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.