கோவிட் 19: இன்று 1,772 புதியத் தொற்றுகள், கே.எல். கட்டுமானத் தளத்தில் அதிக பாதிப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,772 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 3 மரணங்களும் பதிவாகியுள்ளன.

கோலாலம்பூரில் உள்ள ஒரு கட்டுமானத் தள திரளையிலிருந்து (நவம்பர் முதல் செயலில் உள்ள டாமான்லெலா திரளை) ஏராளமான புதிய நேர்வுகள் (567) பதிவாகியுள்ளன.

அதிகமான எண்ணிக்கையிலான பாதிப்புகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் 67.7 விழுக்காடு, சபாவில் 14.7 விழுக்காடு மற்றும் பேராக்கில் 6.2 விழுக்காடு என பதிவாகியுள்ளன.

அதேவேளையில், 1,084 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் இன்று மூவர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர், பலியான மூன்று பேரும் சபாவைச் சேர்ந்தவர்கள். சபாவின் ஒட்டுமொத்த கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை தேசிய மொத்தத்தில் (422) 242 அல்லது 57.35 விழுக்காடு எட்டியுள்ளது.

அவசரப் பிரிவில் 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 56 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

புத்ராஜெயா, சரவாக் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

கோலாலம்பூரில் 696, சிலாங்கூரில் 503, சபாவில் 260, பேராக்கில் 110, நெகிரி செம்பிலான் 67, ஜொகூரில் 48, பினாங்கில் 34, கெடாவில் 20, லாபுவானில் 11, பஹாங்கில் 8, திரெங்கானுவில் 7, மலாக்காவில் 5, கிளந்தானில் 3.

இன்று, புதியத் திரளைகள் எதுவும் கண்டறியப்படவில்லை.