2021 வரவுசெலவுத் திட்டத்தை நிராகரிக்க, எம்.பி.க்களுக்கு அழைப்புவிடுக்க, டாக்டர் மகாதீர் முகமதுவுடன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய கட்சியின் மூத்தத் தலைவர் தெங்கு ரஸலீ ஹம்ஸாவின் நடவடிக்கையை அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் ஷாரில் ஹம்தான் கண்டித்தார்.
முன்னாள் மூத்த அமைச்சர் செய்தது, கட்சி ஒழுங்கிற்கு எதிரானது என்று ஷாரில் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, மகாதீருடனான செய்தியாளர் சந்திப்பு ஒரு சிறிய விளைவைக் கொண்டிருக்கவில்லை, மாறாக 2021 வரவுசெலவுத் திட்டத்தில் அம்னோ உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து குழப்பமடைய செய்துள்ளது.
“கட்சியில் ஓர் இளைஞனாக, நிச்சயமாக நான் வயதானவர்களை மதிக்கிறேன். ஆனால், கட்சியின் ஒரு மூத்த உறுப்பினர், செல்வாக்கு மிக்க ஆலோசகரின் தேவைகள் என்னவென்று எனக்கு புரியவில்லை, எதிர்க்கட்சியுடன் தயங்காமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார்,” என்று அவர் இன்று ஒரு முகநூல் அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று, தெங்கு ரஸாலீ முன்னாள் பிரதமர் மகாதீருடன் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியதை அடுத்து, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) 2021 வரவுசெலவுத் திட்டத்தை நிராகரிக்க அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்தது.
பி.என். அரசாங்கத்தையும் அதன் பிரதமர் முஹைதீன் யாசினையும் தான் அங்கீகரிக்கவில்லை என்றும், பட்ஜெட்டை ஆதரிக்க வாக்களிக்கவில்லை என்றும் தெங்கு ரஸாலீ தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
நேற்றைய வாக்கெடுப்பில், அனைத்து அம்னோ எம்.பி.க்களும், கட்சியின் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கினர், தெங்கு ரசாலீயைத் தவிர என்று ஷாரில் கூறினார்.