குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸலீ ஹம்சா மீது, அம்னோ எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் கூட்டணி முகமது நஸ்ரி அப்துல் அஜீஸ் கருத்து தெரிவித்தார்.
தற்போது அம்னோ எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை என்று நஸ்ரி கூறினார்.
எனவே, தெங்கு ரஸலீயைப் பதவி நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகள் அம்னோ எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவதற்கு மட்டுமே வழிவகுக்கும் என்றார்.
“எங்கள் (அம்னோ) எண்ணிக்கை பெரியதாக இருந்தால், நாங்கள் பிறரை அகற்றலாம், இது யாரையும் அகற்றும் நேரம் அல்ல,” என்று சினார் ஆன்லைனில் அவர் மேற்கோளிட்டுள்ளார்.
பாடாங் ரெங்காஸ் எம்.பி.யுமான நஸ்ரி, தேர்தலின் போது தெங்கு ரஸாலே அம்னோவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால், அந்த நிலைமை வேறு என்றும் கூறினார்.
2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுக்க, டிசம்பர் 14-ம் தேதி தெங்கு ரஸாலே டாக்டர் மகாதீர் முகமதுவுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கடந்துகொண்டார்.
நேற்று, அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் ஷாரில் ஹம்டான் தெங்கு ரஸாலீயை விமர்சித்தார், கட்சி உறுப்பினர்களை அவர் தவறாக வழிநடத்துவதாகவும் கட்சி ஒழுக்கத்தை மதிக்க தவறிவிட்டார் எனவும் அவர் கூறினார்.
மறுபுறம் நஸ்ரி, தெங்கு ரஸலீ அம்னோ உறுப்பினர்களைக் குழப்பவில்லை என்று கருதுகிறார், ஏனெனில் உண்மையில் எம்.பி.க்கள் அவரவர் கருத்தாய்வுகளின்படி முடிவுகளை எடுக்க சுதந்திரமாக உள்ளனர்.
உண்மையில், அம்னோ எம்.பி.க்கள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவினால் தற்போதைய பி.என். அரசாங்கம் உருவாக்கப்பட்டது என்றார்.
“எனவே, எம்.பி.க்கள் அவரவர் சொந்த முடிவுகளை எடுக்க சுதந்திரமாக இருக்கிறார்கள். நாம் முன்பு அரசாங்கத்தை அமைத்தபோது, அதனைக் கட்சிகள் தீர்மானிக்கவில்லை.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் கூடி, ஒப்புக்கொண்டனர், அதன்பிறகே அம்னோ உச்சமன்ற சபைக்கு நாங்கள் அறிவித்தோம்,” என்று அவர் கூறினார்.