சுகாதார அமைச்சு இன்று, 1,220 புதிய கோவிட் -19 நேர்வுகளும் 3 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
மலேசியாவில் ஒட்டுமொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 89,133-ஐ எட்டியுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆக அதிகப் புதிய நேர்வுகள் (54.5 %) பதிவாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து, சபாவில் (15.1 %), மலாக்காவில் (8 %) எனப் பதிவாகியுள்ளது
மலாக்காவில் பதிவாகியுள்ள அனைத்து (98) புதிய நேர்வுகளும், சுங்கை பூலோ சிறைச்சாலையுடன் இணைக்கப்பட்ட பெஞ்சாரா ஜாலான் ஹராப்பான் திரளையிலிருந்து வந்தவை.
அவசரப் பிரிவில் 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 53 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
அதேவேளையில், 1,297 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் இன்று, சபாவில் இருவர் மற்றும் ஜொகூரில் ஒருவர் என மூவர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 368, கோலாலம்பூரில் 297, சபாவில் 184, மலாக்காவில் 98, பினாங்கில் 80, ஜொகூரில் 67, பேராக்கில் 41, நெகிரி செம்பிலானில் 33, லாபுவானில் 16, கிளந்தானில் 10, சரவாக் மற்றும் கெடாவில் தலா 9, பஹாங்கில் 4, திரெங்கானு மற்றும் புத்ராஜெயாவில் தலா 2.
மேலும் இன்று, பசிபிக் கட்டுமானத் தளத் திரளை, ஜாலான் ரூசா திரளை (கோலாலம்பூர்); மாரிங்கான் திரளை (சபா) என 3 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.