எதிர்க்கட்சியின் நற்பெயர் பாதுகாக்கப்பட வேண்டும் – வாரிசான் எம்.பி.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தை (பி.என்) கவிழ்க்க, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் “வலுவான மற்றும் உறுதியான” பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி இப்போது தனது நற்பெயரைப் பாதுகாக்க வேண்டும் என்று வாரிசான் எம்.பி. ஒருவர் கூறியுள்ளார்.

கோத்த பெலுட் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்னராய்சா முனிரா மஜிலிஸ் கூறுகையில், இந்தக் கருத்து தன்னிடமிருந்து மட்டுமல்லாமல், சபாவில் உள்ள டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் உட்பட பிற கட்சிகளும் இதனையே கருதுகிறது என்றார்.

நேற்றிரவு ஓர் அறிக்கையில், இஸ்னரைய்சா, வாரிசான் தலைவர் மொஹமட் ஷாஃபி அப்டால், தலைமையை மாற்ற எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தது பக்காத்தான் ஹராப்பானில் (பி.எச்.) சர்ச்சைகளைத் தூண்டும் நோக்கம் கொண்டதல்ல என்று கூறினார்.

எதிர்க்கட்சிக்கான முன்னேற்றங்கள் குறித்து அமானா மற்றும் டிஏபி தலைவர்கள் கூட்டு அறிக்கை வெளியிட்டதை அடுத்து, பி.எச். தலைமை மன்றக் கூட்டம் நேற்று இரத்து செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி தலைமைச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் அரசாங்கத்தில் உள்ள எம்.பி.க்கள் தாங்கள் பெற்ற ஆணையைத் திருப்பித் தருவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று பி.எச்.க்கு நினைவுறுத்தினர்.

மறுபுறம், டிஏபியைச் சேர்ந்த லுயாங் சட்டமன்ற உறுப்பினர், பூங் ஜின் ஸே, அன்வாரின் குற்றச்சாட்டுகள் மக்களை ஏமாற்றமடையச் செய்ததாகக் கூறினார்.

“தங்களுக்கு ‘வலுவான மற்றும் உறுதியான’ பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்பத்தகாதவர்கள் என்று கேலி செய்யப்பட்டுள்ளனர்.

“அதிகாரத்தைக் கைப்பற்றவும், இனவெறி கருத்துக்களை வெளியிடுவதற்கும், மதத்தைத் தொடுவதற்கும் பொய் சொன்ன மற்ற மூத்த அரசியல் தலைவர்கள் சமீப காலமாக இன்னும் மோசமடைந்து வருவதாக தெரிகிறது,” என்று அவர் கூறினார்.