‘மலாக்கா கேட்வே’ திட்ட மேம்பாட்டாளர், கே.ஏ.ஜெ. டெவலப்மென்ட் சென். பெர். (கே.ஏ.ஜே.டி.) நிறுவனம், நில மீட்பு சலுகையை நிறுத்த மலாக்கா மாநில அரசு எடுத்த முடிவு குறித்து நீதித்துறை மறுஆய்வு செய்துள்ளது.
மலாக்கா கேட்வே என்பது மலாக்காவின் பழையப் பகுதியில் அமைந்துள்ள மூன்று தீவுகளை உள்ளடக்கிய, இன்னும் முடிக்கப்படாதக் கடலோர மெகா திட்டமாகும், இது அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் காலத்தில், 2014-ல் தொடங்கப்பட்டது.
நிறுவனத்திற்கு நில மானிய உரிமை வழங்கப்பட்டிருந்தாலும், நில பிரீமியம் மற்றும் மதிப்பீட்டு வரிகளை முழுமையாக செலுத்தியிருந்த போதிலும், மீட்டெடுக்கப்பட்ட மூன்று தீவுகளில் ஒன்றைத் திருப்பித் தருமாறு, தற்போது மாநில அரசு கோரியுள்ளது என மேம்பாட்டு நிறுவனம் ஓர் அறிக்கையில் நீதி கூறியுள்ளது.
“எல்லாவற்றிற்கும் மேலாக, 3 தீவுகளுக்கான நில உரிமை மானியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, உரியக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், நாங்கள் இரண்டு தீவுகளுக்கான சொத்து உரிமை மானியத்திற்காக மாநில அரசுக்கு RM10 மில்லியனுக்கும் அதிகமான தொகையைச் செலுத்தியுள்ளோம், அதேநேரத்தில், இரண்டாவது தீவுகான நில மானியம் பெறுவதற்கும் முறையாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது,” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
அக்டோபர் 4, 2017 அன்று, சலுகை வழங்கப்பட்டபோது ஒப்புக் கொள்ளப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் அதை முடிக்க நிறுவனம் தவறியதால், நவம்பர் 17-ம் தேதி, மலாக்கா மாநில அரசு கடல் மீட்பு ஒப்பந்தத்தை நிறுத்தியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
இந்த முடிவு கோவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டம் 2020 (சட்டம் 829) ஐ மீறியதாக நவம்பர் 22-ம் தேதி, நீதிமன்றத்தில் வாதிடுவதாக அந்நிறுவனம் கூறியது, இது 2020 டிசம்பர் 31-க்குப் பிறகு, கட்டுமானம் தொடர்பான பணிநீக்கத்தைத் தடை செய்கிறது.
மார்ச் 18 முதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கடல் மீட்பு சலுகையை நீட்டிக்க நாங்கள் பல எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்களை மலாக்கா மாநில அரசுக்குச் சமர்ப்பித்தோம், ஆனால் அவை நிராகரிக்கப்பட்டன. பின்னர், நவம்பர் 16-ம் தேதி, நாங்கள் அத்திட்டத்தைத் திட்டமிட்டபடி முடிக்கவில்லை என்ற அடிப்படையில் பணிநீக்க அறிவிப்பு வழங்கப்பட்டது,” என்று கே.ஏ.ஜே.டி. தலைமை நிர்வாக அதிகாரி மிஷேல் ஓங் கூறினார் .
அப்பணியைச் செயல்படுத்த தேவையான உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டு வல்லுநர்களைத் தற்போது மலேசியாவுக்குக் கொண்டுவர முடியாது, எனவே அனைத்து கோவிட் -19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னரே மீட்பு பணிகள் தொடர முடியும் என்று ஓங் கூறினார்.
மலாக்கா கேட்வே திட்டம் முழுக்க முழுக்க கே.ஏ.ஜே.டி.-க்கு சொந்தமானது, மலாக்கா மாநில அரசாங்கத்திற்கு அல்ல என்று ஓங் வலியுறுத்தினார். இதில் வெளிநாடு மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்கள் 5 பில்லியன் அமெரிக்க டாலரை (RM20 பில்லியன்) முதலீடு செய்துள்ளனர்.
கே.ஏ.ஜே.டி.-இன் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவர், சீன நாட்டிற்குச் சொந்தமான பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா (பவர்சீனா) ஆகும்.