நாட்டில் இன்று, 1,683 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவான நிலையில், இறப்புகள் எதுவும் இல்லை எனச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இருப்பினும், கோவிட் -19 தொற்றின் காரணமாக 280 மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,697 பேருக்கு வீட்டில் தனிமைப்படுத்துதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1,052 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அவசரப் பிரிவில் 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 51 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 692, சபாவில் 260, கோலாலம்பூரில் 197, நெகிரி செம்பிலான் 174, மலாக்காவில் 140, ஜொகூரில் 77, பேராக்கில் 65, பினாங்கில் 37, லாபுவானில் 19, பஹாங் மற்றும் புத்ராஜெயாவில் தலா 6, கெடா மற்றும் திரெங்கானுவில் தலா 4, சரவாக் மற்றும் கிளந்தானில் 1.
மேலும் இன்று, 6 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
லெபோ கட்டுமானத்தளத் திரளை – சிலாங்கூர், செப்பாங் மாவட்டம்; சுகுட் திரளை – சபா, பெனம்பாங் & பாப்பார் மாவட்டம்; ஜாலான் தெங்கா கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் மாவட்டம்; பெர்சியாரான் ஹைட் திரளை – நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம்; தெம்போக் காஜா திரளை – ஜொகூர், குளுவாங் மாவட்டம்; உத்தாமா ரினி திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு, கூலாய் & பொந்தியான் மாவட்டங்கள்.