கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையை இன்னும் பெற முடியும் என்று பி.கே.ஆர். பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுதியோன் இஸ்மாயில் நம்புகிறார்.
இந்த விவகாரத்தைச் சட்டரீதியானப் பிரகடனம் (எஸ்டி) மூலமாகவோ அல்லது மக்களவையின் மூலமாகவோ செய்ய முடியும் என்றார் அவர்.
‘சீனார் ஹரியான்’-உடன் பேசிய சைஃபுதீன், இந்த விஷயத்தை அன்வர் எப்போதும் பி.எச். தலைமை மன்றத்திடம் கூறிவருகிறார் என்றார்.
“எண்ணிக்கையை (எஸ்டி) பகிர்ந்துகொள்ள நான் தயாராக இல்லை. நாங்கள் யாரைச் சந்திக்கிறோம், எவ்வளவு பெறுகிறோம், மற்றும் இன்னும் பலவற்றை நான் அறிவேன்.
இதற்கிடையில், மார்ச் மாதத்தில் சட்டமன்றம் மீண்டும் கூடும் போது, பிரதமர் முஹைதீன் யாசினை மக்களவையில் வீழ்த்துவதற்கான முயற்சிகள் தொடரும் என்று சைபுதீன் நேற்று உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்தார்.
முன்னதாக, கெத்தாரே அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் அன்னுவார் மூசா, அன்வரை ஆதரிக்க கட்சிக்குள்ளேயே தொடர்ந்து முயற்சித்து வருவதாகக் கூறினார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், கடந்த அக்டோபரில் பி.கே.ஆர். தலைவரை ஆதரிக்க பி.என். எம்.பி.க்களுக்கு அழைப்புவிடுத்தார்.
அண்மையில், 2021 வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்க எந்த அரசாங்க எம்.பி.க்களும் வாக்களிக்கவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த சைஃபுதீன், பி.கே.ஆர். தலைவருக்கு அரசாங்கத்தை அமைக்க ஆதரவைப் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதைக் குறை கூறக்கூடாது என்றும் கூறினார்.
“இது அன்வாரின் தனிப்பட்ட முடிவு மற்றும் நிகழ்ச்சி நிரல் எனும் குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன்; இது அன்வாரின் தனிப்பட்ட முயற்சி என்பதை நான் கடுமையாக மறுக்கிறேன்.
“பி.எச். (அரசாங்கத்தின்) ஆணையைத் திரும்பப் பெற, அன்வரை (எதிர்க்கட்சித் தலைவராக) பரிந்துரைத்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட ஒருவர் தனது பொறுப்பை நிறைவேற்ற முயற்சிப்பது பாவம் அல்ல,” என்று சினார் ஹரியானிடம் அவர் கூறினார்.