பாஸ் தலைவர் அவாங் அப்துல் ஹாடி அவாங், ஜிஇ15-க்கான நாற்காலி பகிர்வுகள் கட்சி மத்தியத் தலைமையின் விவாதத்தில் உள்ளது என்றார்.
“எங்கள் நாற்காலிகளின் பகிர்வு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்களிடம் மத்திய மட்டத்தில் ஆலோசகர்கள் உள்ளனர், இளைஞர்கள், மாநிலங்கள் மட்டுமல்ல.
“அதனால்தான் எந்தவொரு தரப்பினரிடமிருந்து வரும் எந்தவொரு அறிக்கையையும், நாங்கள் ஏற்க முடியாது. மீண்டும் நாங்கள் மையத்திற்குத்தான் திரும்ப வேண்டும்,” என்று அவர் கூறியதாக சீனார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், ஜிஇ15-ஐ எதிர்கொள்ளும் முதல் படியாக, தேசியக் கூட்டணி தலைவர்கள் மன்றத்தை நிறுவியுள்ளதாக ஹாடி கூறினார்.
பி.என் சம்பந்தப்பட்ட எந்தவொரு முக்கியமான முடிவும், தலைவர்கள் மன்றத்தின் வழியாக செல்லும் என்று ஹாடி மேலும் விளக்கினார்.
“தலைவர்கள் மன்றம் நிறுவப்பட்டது முவஃபாக்கட் நேஷனலில் (எம்.என்.) பாஸ் உறவைப் பாதிக்காது, ஏனென்றால் நாங்கள் எம்.என்-ஐ தொடர்ந்து கவனித்துக்கொள்வோம், அதேநேரத்தில் மலேசிய மட்டத்தில் பி.என்., தீபகற்ப மட்டத்தில் மட்டுமே எம்.என்.,” என்றார் அவர்.
மும்முணை போட்டியைத் தவிர்க்கும்
இதற்கிடையில், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், முடிந்தவரை ஒரு ஒருமித்த கருத்தை எட்ட முடியும், இதனால் பாஸ், பெர்சத்து, அம்னோ இடையே மும்முணை போட்டியைத் தவிர்க்க முடியும் என்றார்.
அவரைப் பொறுத்தவரை, அம்னோ மற்றும் பாஸ் இடையே இடங்களைப் பிரிப்பது குறித்த விவாதம் இதுவரை 50 விழுக்காட்டை எட்டியுள்ளது.
“… ஆனால் நாங்கள் பெர்சத்துவுடன் ஒரு சிறந்த தீர்வைக் காண முயற்சிக்கிறோம்,” என்று அவர் தெரிவித்ததாக சீனார் ஹரியான் செய்திகள் கூறுகின்றன.