‘புதிய கதை’யின் வழி, ஹராப்பான் ஜிஇ15-ஐ வெல்ல முடியும் – பி.கே.ஆர். எம்.பி.

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு “புதிய வழிமுறை”-ஐக் கண்டுபிடித்தால், 15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்று பி.கே.ஆர். எம்.பி. கூறியுள்ளார்.

ஹராப்பானின் ஜிஇ14 வெற்றிக்குப் பங்களித்த பிரச்சினைகளை – அப்போதையப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகுவதற்கான அழைப்புகள் மற்றும் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) இரத்து செய்யப்பட்டவை உட்பட – இப்போது பயன்படுத்த முடியாது என்று பாசீர் கூடாங் எம்.பி. ஹசான் கரீம் கூறினார்.

“எடுத்துக்காட்டாக, சமீபத்திய சபா தேர்தலில், பி.கே.ஆர். மற்றும் டி.ஏ.பி. வென்ற நகரப் பகுதிகளில், ஹராப்பானுக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் ஆதரவு இன்னும் வலுவாக உள்ளது.

“2018-ஐப் போலவே திரும்பவும் (வாக்களிக்கவும்) உற்சாகம் (குறைவாக உள்ளது) … எனவே ஹராப்பான் இப்போது, ​​அதன் தலைவர்கள், நேர்மையாக ஒரு புதிய அரசியல் வழிமுறையைக் கையாள வேண்டும்.

“இப்போது, ​​ஒரு புதிய கதை இருக்க வேண்டும், வேலையில்லாத மக்கள், வேலையற்ற பட்டதாரிகளுக்கு,” என்று அவர் பி.கே.ஆர். கட்சியின் சுவாரா கெஅடிலான் –க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

“கோவிட்-19 தாக்குதல்களுக்குப் பிந்திய அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க ஹராப்பானால் முடியும் என்பதை மக்கள் நம்பினால், அவர்கள் தங்கள் ஆதரவை வழங்குவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

சமீபத்தில் முடிவடைந்த மக்களவை அமர்வில் நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர்த்த போதிலும், பிரதமர் முஹைதீன் யாசினும் அவரது பெர்சத்து கட்சியும் ஜிஇ15-ஐ எதிர்கொள்வதில் அச்சத்துடனேயே இருக்கின்றனர் என்று ஹசான் கூறினார்.

“முஹைதீன் வலுவான ஆதரவு தளம் இல்லாமலேயேத் தேர்தலில் நுழைவார்,” என்று அவர் கூறினார்.

மலாய் பெரும்பான்மை மற்றும் மலாய் அல்லாத பெரும்பான்மை மற்றும் கலப்பு இடங்களைக் கொண்ட ஹராப்பான் கூட்டணியைப் போலல்லாமல், பெர்சத்து, அம்னோ மற்றும் பாஸ் ஆகியவை மலாய்-முஸ்லீம் வாக்காளர்களிடையே ஒரே ஆதரவு தளத்தைப் பகிர்ந்து கொள்வதையும் ஹசான் சுட்டிக்காட்டினார்.

எனவே, மலாய்க்காரர் ஆதரவை வலுப்படுத்தி, மலாய்க்காரர் அல்லாதவர் பெரும்பான்மை பகுதிகளில் இருப்பை அதிகரிப்பதன் வழி, ஜிஇ15-ல் ஹராப்பான் அதன் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்தலாம் என்று அவர் கூறினார்.