கெடாவில் கோயில் உடைப்பை நிறுத்துவதற்கான அழைப்புகள் சாத்தியமற்ற நிலையில்

பி இராமசாமி | கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி மொஹமட் நோர் மீண்டும் அபத்தமாக செயல்பட்டுள்ளார். இனி கோயில்கள் இடிக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்குமாறு, சில இந்து குழுக்கள் கெடா அரசிடம் கோரியபோது, ​​சட்டவிரோத கோயில்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சனுசி அச்சுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத இந்து கோயில்களை, அவற்றின் உறுப்பினர்கள் அகற்ற வேண்டும் எனவும், அப்படி செய்யத் தவறினால், கோயில்கள் இடிபடுவதைக் காணத் தயாராக இருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

சனுசியைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் எந்தவொரு சமரசமும் இல்லை. ஆயிரக்கணக்கான சட்டவிரோத கட்டிடங்கள், தெருவோரக் கடைகள் மற்றும் பல உள்ளதை அவர் நினைவில் கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரை, சட்டவிரோதமாக இந்து கோயில்கள் மட்டுமே உள்ளன, வேறு எதுவும் இல்லை

இஸ்லாமியக் கட்சியான பாஸ் உறுப்பினராக இருந்தபோதிலும், அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கெடா முதல் மனிதரின் கூற்று இது. அவரது பல்வேறான, மோசமான கருத்துகளுக்காக பாஸ் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதற்கு அவருடைய கட்சி அவரது செயல்களை மன்னிக்கிறது என்று அர்த்தமா?

இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள், அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாதவர்கள் மற்றும் பொருளாதார பலவீனம் கொண்டவர்கள் என்பதால், அவர்களை எளிதான இலக்குகளாக மாற்றி, சட்டவிரோதம் என்ற பெயரில் இந்து கோயில்களை அவர் குறிவைப்பதாகத் தெரிகிறது. ஆனால், மற்ற சமூகங்களுக்குப் பொருளாதாரச் செல்வாக்கு அல்லது அரசியல் வலிமை இருப்பதால் அவர்களைத் தொட அவர் தயங்குகிறாரா? வேறுமாதிரி சொல்வதானால், சனுசி இந்துக்களை பகடிவதை செய்கிறார்.

தனியார் அல்லது அரசு நிலத்தில் அமைந்துள்ள இந்து கோவில்கள் உட்பட, பிற மதங்களும் அவற்றின் வழிபாட்டுத் தலங்களும் அழிவுக்கான இலக்குகளாக மாறி வருகின்றன. பாஸ் நிர்வகிக்கும் கெடாவில், இஸ்லாத்தைத் தவிர வேறு மதங்களுக்குச் சகிப்புத்தன்மை இல்லாததுபோல் தெரிகிறது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இந்து கோவில்களை விட்டுக்கொடுக்க முடியாது. பரந்த பூஜாங் பள்ளத்தாக்கில் எஞ்சியிருக்கும், பண்டைய இந்து-புத்த சிலைகள் கட்டமைப்புகள் கூட நீண்ட காலம் எஞ்சியிருக்காது, அவை 3,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என்றாலும்.

இந்து குழுக்கள் சனுசியிடம் கோயில்களுக்கு உத்தரவாதம் கோருவது வேடிக்கையானது.

ஆனால், பாஸ் அரசாங்கத்தின் கீழ், சனுசியின் நடவடிக்கைகளை வெட்கமின்றி மன்னித்து, நியாயப்படுத்தும் இந்தியர்களும் உள்ளனர்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பினாங்கு மக்களுக்கு, நீர் விநியோகத்தைத் துண்டிப்பதாக அச்சுறுத்தும் அளவிற்கு அவரால் செல்ல முடிகிறது என்றால், சட்டவிரோத இந்து கோவில்களை இடிப்பதில் இருந்து அவரைத் தடுக்க யாராலும் முடியாது.

இந்து கோயில்களுக்கு நிலம் மற்றும் போதுமான நிதி இருந்தால், அவை ஏன் சட்டவிரோதமாக செயல்பட போகின்றன? சனுசியின் கிட்டப்பார்வை கண்ணோட்டத்தில், கெடாவில் உள்ள இந்துக்களுக்கு, அரசு அல்லது தனியார் நிலங்களைத் தேடி, அவற்றில் வழிபாட்டுத் தலங்களை அமைப்பதை விட வேறு வேலை இல்லை என்று தெரிகிறது போலும்.


பி இராமசாமி பிறை சட்டமன்ற உறுப்பினர், பினாங்கு துணை முதலமைச்சர் II