சுகாதார அமைச்சு இன்று, 1,348 புதிய கோவிட் -19 நேர்வுகளும் 5 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய பாதிப்புகளில் 56.8 விழுக்காடு கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்தும் சபாவில் 14 விழுக்காடும் மலாக்காவில் 9.2 விழுக்காடும் பதிவாகியுள்ளன.
710 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் இன்று ஐவர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். சுங்கை பூலோ மருத்துவமனையில் மூவர், சிரம்பான் மற்றும் கோத்தா கினபாலுவில் தலா ஒருவர் என ஐந்து மரணங்கள் நேர்ந்துள்ளன.
அவசரப் பிரிவில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 44 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 535, கோலாலம்பூரில் 226, மலாக்காவில் 124, சபாவில் 189, ஜொகூரில் 118, பஹாங்கில் 45, பினாங்கில் 43, நெகிரி செம்பிலான் 31, கெடாவில் 14, பேராக்கில் 8, கிளந்தான் மற்றும் புத்ராஜெயாவில் 4, லாபுவானில் 2, திரெங்கானுவில் 1.
மேலும் இன்று, 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
பணியிடம் சார்ந்த மெனாரா வாங் திரளை – கோலாலம்பூர், சிலாங்கூர் & பஹாங் மாநிலங்களை உள்ளடக்கியது; சகா தெங்கா திரளை – சபா, தெனோம் & கெனிங்காவ் மாவட்டம்; கோலாம் ஆயேர் திரளை – கெடா, கோத்த ஸ்டார் & குபாங் பாசு மாவட்டங்கள்; ஜாலான் பானா கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் மாவட்டம்; ஹாலா முத்தியாரா திரளை – பேராக், கிந்தா மாவட்டம்.