ஆசிரியர் குறிப்பு : இந்தச் செய்தி முதலில் சீனார் ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையை மேற்கோள்காட்டியது, பின்னர் முக்ரிஸ் மகாதீரின் நேர்காணல் வீடியோவை மலேசியாகினி பார்த்த பின்னர், செய்தி சில மாற்றங்களுடன்.
அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ.) சுயேட்சை வேட்பாளராக பெஜுவாங் போட்டியிடாது என்று அதன் தலைவர் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.
முன்னாள் கெடா மந்திரி பெசாரான முக்ரிஸ் கூறுகையில், பெஜுவாங்கிற்குச் சில தேர்வுகள் உள்ளன, சிறந்த நகர்வைக் கண்டுபிடிப்பதற்கான பரிசீலனைகளை அது மேற்கொண்டு வருகின்றது.
முக்ரிஸ்சின் கூற்றுப்படி, அடுத்த ஜிஇ-இல் ஓர் ‘அதிகாரப்பூர்வக் கூட்டணி’-யாகப் பங்கேற்பதை உறுதிசெய்ய பெஜுவாங் எப்போதும் திறந்திருக்கும் என நேற்று சீனார் ஹரியானுக்கு அளித்த பேட்டியில் முக்ரிஸ் கூறினார்.
பெர்சத்து கட்சியின் தலைவர் முகைதீன் பி.எச்.-யிலிருந்து வெளியேற முடிவெடுத்த போது, அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான முக்ரிஸ், அவரது தந்தை, டாக்டர் மகாதீர் மற்றும் சில ஆதரவாளர்களுடன் பெர்சத்துவிலிருந்து வெளியேறி, பெஜுவாங்கை அமைத்தார்.
இருப்பினும், இதுவரை பெஜுவாங்கின் பதிவுக்கு அரசாங்கத்தால் ஒப்புதல் கிடைக்கவில்லை.
அக்., 29-ல், பெஜுவாங் செயலாளர் அமிருதீன் ஹம்ஸா, ஏழு பதிவு விண்ணப்பங்கள் சங்கங்களின் பதிவு இலாகாவுக்கு (ஆர்ஓஎஸ்) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்; ஆனால் இதுவரை கட்சிக்கு அவற்றின் நிலை குறித்து எழுத்துப்பூர்வப் பதில் கிடைக்கவில்லை.
ஆர்.ஓ.எஸ். தற்போது பெர்சத்து பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடின் தலைமையிலான உள்துறை அமைச்சின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, டிசம்பர் 10-ம் தேதி, கட்சியின் பதிவு நிலை குறித்து ஆர்.ஓ.எஸ். ஒரு முடிவை எடுக்க வேண்டுமென, பெஜுவாங் ஒரு நீதி மறுஆய்வு விண்ணப்பத்தை செய்துள்ளது.