‘அம்னோவுடன் ஒத்துழைப்பு வேண்டுமா என்பதை டிஏபி விளக்க வேண்டும்’

அக்கட்சியின் தலைவர்கள் சம்பந்தப்பட்ட பல ஊழல் வழக்குகள் மற்றும் இன, மத பிரச்சினைகளில் அடிக்கடி அவர்கள் விளையாடுவதைத் தொடர்ந்து, அம்னோவுடன் ஒத்துழைத்தால் டிஏபி விமர்சனங்களைப் பெறும் என்று சரவாக் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர் சோங் சியாங் ஜென் தெரிவித்தார்.

ஒத்துழைப்பின் விதிமுறைகளையும், அரசியல் உறவுகளை ஏற்படுத்தினால் அம்னோவை டிஏபி எவ்வாறு கண்காணிக்க முடியும் என்பதையும் கட்சி விளக்க வேண்டும் என்று சோங் கூரினார்.

பேராக் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து டிஏபி மற்றும் அம்னோ இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கருத்து தெரிவித்தபோது சோங் இவ்வாறு கூறினார்; அந்நேரத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் நன்றாகப் பழகியதையும் சில நிபந்தனைகளுடன் பணியாற்றத் தயாராக இருந்ததையும் காண முடிந்தது.

“நாட்டின் எதிர்காலத்தை நாம் கவனிக்க வேண்டும், நாம் சுயநலமாக இருக்க முடியாது, மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை (அரசியல் ஒத்துழைப்பு) மட்டும் நம்ப முடியாது,” என்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அவர் விளக்கினார்.

பேராக் அரசியல் நெருக்கடியைப் பற்றி குறிப்பிடுகையில், அம்னோவுடன் ஒத்துழைத்தால், அனைத்து இனங்களுக்கும் சமமான சலுகை எனும் கொள்கையை டிஏபி அடமானம் வைக்க வேண்டிவரும் என்றார் சோங்.

“இது டிஏபியின் அடிப்படைக் கொள்கை. அவர்கள் (அம்னோ) ஒப்புக் கொண்டால் (பின்னர்) நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

உண்மையில், அம்னோவுடன் இணைந்து டிஏபி பணியாற்றினால், எஸ்.யு.பி.பி.  மற்றும் ம.சி.ச.-வைப் போலல்லாமல், அரசாங்கத்தை மேற்பார்வையிடுவதில் கட்சி பங்கை வகிக்க முடியும் என்று தான் நம்புவதாக சோங் கூறினார்.

எவ்வாறாயினும், இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் விரோதமாக இருக்கின்றன என்ற கருத்து இருப்பதால், டிஏபி மற்றும் அம்னோ இடையேயான ஒத்துழைப்பு எதிர்காலத்தில் (தற்போது) ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

“அக்கூட்டணி மக்களுக்குப் பயனளிக்கும் என்பதை நிரூபிக்க குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

அம்னோவுடன் ஒப்பிடும்போது, பாஸ் அங்கு போட்டியிடாவிட்டாலும், பாஸ் மீது ​​சரவாக் மக்கள் மோசமான எண்ணம் கொண்டுள்ளனர் என்று சோங் கூறினார்.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பாஸ், “மத வெறியர்கள்” என்றும், தங்களை ‘அதிக மலாய் மற்றும் இஸ்லாமியர்கள்’ என்று உறுதிப்படுத்திக் கொள்வதில் அவர்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பதையும் காண முடிகிறது என்றார் அவர்.

“மூன்று மில்லியன் அல்லது 400,000 சரவாகியர்களைக் கொண்ட சரவாக் மக்கள் தொகையில், 10 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தீபகற்பத்தில் வாழ்கின்றனர், அங்கு வேலை செய்கிறார்கள். அவர்கள் பொதுவாக பாஸ் கொள்கைகளால்  பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

“சரவாக் கல்வி, மருத்துவம், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சுயேட்சையாக இருக்கும் போதிலும், அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், மேலும் மலாய் மற்றும் இஸ்லாமியர்களாக இருக்க அம்னோவுடன் போட்டியிடுவதற்கும் பாஸ் உடன் இருந்தாலும், அது மத்திய அரசின் கொள்கையைப் பாதிக்கும்,” என்று அவர் கூறினார்.