ஊழல் சதி குற்றச்சாட்டுகளை எம்.ஏ.சி.சி. தீவிரமாக எடுத்துக்கொள்கிறது

‘மலேசியாவில் சதி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ என்ற தலைப்பில், முகமட் ஃபௌஸான் ஜாமில் என்ற பெயரில், நேற்று புலனக்குழுவில் பகிரப்பட்ட தகவலை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

நேற்று ஓர் அறிக்கையில், இந்த விஷயம் தவறானது மற்றும் அவதூறு என்றும், சம்பந்தப்பட்டவர் பயன்படுத்திய மின்னஞ்சலும் போலியானது என்றும் எம்.ஏ.சி.சி. தெரிவித்தது.

“எனவே, சில தரப்பினரால் பரவலாகப் பரப்பப்படும் எழுத்துப்பூர்வமான அந்தச் செய்தி தொடர்பாகக் கூடுதல் தகவல்களைப் பெற, அத்தொலைபேசி எண்ணில் சம்பந்தப்பட்டவரை எம்.ஏ.சி.சி. தொடர்பு கொண்டுள்ளது.

“ஆனால், சம்பந்தப்பட்டவர் தனது பெயர் மற்றும் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி பகிரப்பட்ட அச்செய்தி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அந்நபர் புலனம் வழியாக விளக்கினார்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, அந்நபர் இந்த விவகாரம் குறித்து போலீஸ் புகார் அளிப்பார்.

இந்தச் குற்றச்சாட்டு வேண்டுமென்றே, எம்.ஏ.சி.சி. பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் பரப்பப்பட்டதாகவும், இந்த விஷயத்தில் அரச மலேசியக் காவல்துறை விசாரணை நடத்தும் என்று நம்புவதாகவும் எம்.ஏ.சி.சி. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

– பெர்னாமா