அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரஸலீ ஹம்ஸா, ஒரு முறை பாஸ் முன்னாள் தலைவரும் அரசியல் பிரமுகருமான, டாக்டர் புர்ஹானுதீன் அல்-ஹெல்மியின், ‘தேசிய மலாய் அரசு (நாடு)’ என்ற கருத்தைப் புதுப்பிக்க முடியும் என்பதை ஆதரித்தார்.
தெளிவாக, இப்போது யோசனை என்னவென்றால், இனம் மற்றும் வம்சாவளியைப் பொருட்படுத்தாமல், அனைத்து குடிமக்களும் ‘மலேசியர்கள்’ என்ற கோட்பாடு.
“டாக்டர் புர்ஹானுதீன், நாம் அனைவரும் மலாயாவில் இருக்கிறோம், எந்த இனமாக இருந்தாலும், ‘மலாய்’ என்று பெயரிடப்படுவோம் என்று பரிந்துரைத்தார்.
“ஏனென்றால், இந்த நுசாந்தாரா தீவுக்கூட்டங்களைச் சேர்ந்த நம் நாடு மலாயா என்றாகிவிட்டது, நியாயமாக இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும், நாம் அனைவரும் மலாய்க்காரர்கள் என்று கருதப்பட வேண்டியவர்கள்,” என்று அவர் கூறினார்.
இனம் அல்லது வம்சாவளியைப் பொருட்படுத்தாமல், ஒரு தேசிய அடையாளமாக, குடியுரிமையின் ஒரே ஒரு பெயரை மட்டுமே பயன்படுத்தும் இந்தோனேசிய தேசிய அரசை ரஸாலீ எடுத்துக்காட்டாகக் கூறினார்.
“நாமும் (அதைச் செய்ய முடியும்), இதனால் இனங்களுக்கு இடையில் இனி சச்சரவுகள் இருக்காது.
“நாம் துரத்திப் பிடிக்க எதுவும் இல்லை என்று நினைக்கிறேன், அனைத்தையும் பகிர்ந்துகொள்ளலாம்,” என்று அவர் ‘மலேசியாவின் எதிர்காலம்’ குறித்த கருத்துரையாடல் ஒன்றில் பேசியுள்ளார்.
சுதந்திரத்திற்கான இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, முதல் மலாய் அரசியல் கட்சித் தலைவர்களான புர்ஹானுதீன், பின்னர் பார்ட்டி கெபாங்சன் மெலாயு மலாயா (பி.கே.எம்.எம்.) ஒரு கூட்டு கருத்தியல் இடதுசாரி அமைப்புகளான புசாட் தெனகா ரக்யாட் (புத்ரா) அமைத்தார்.
இதற்கிடையில், சிங்கப்பூரில் உள்ள ‘கெசத்துவான் மலாயன் டெமொகிராத்திக்’ (எம்.டி.யு.) மற்றும் சில குழுவினர், ‘மஜ்லிஸ் பெர்தின்டாக் பெர்சமா செமலாயா’ (ஏ.எம்.சி.ஜே.ஏ) எனும் பல்லின கூட்டு அமைப்பை உருவாக்கின.
1947-இல், புத்ரா-ஏ.எம்.சி.ஜே.ஏ. கூட்டணி, மக்கள் அரசியலமைப்பை முன்மொழிந்தது, இது மலாயன் யூனியனுக்கு எதிரான 10 முக்கியக் கொள்கைகளை உள்ளடக்கியது. 1946-ல், மலாயாவில் இது பெரும் சர்ச்சையைத் தூண்டியது.
மக்கள் அரசியலமைப்பின் ஆறாவது கொள்கை பின்வருமாறு கூறுகிறது : ‘மலாயாவை ஒரு நிரந்தர வசிப்பிடமாகக் கருதும், விசுவாசம் கொண்டிருக்க விரும்பும் அனைவருக்கும் குடியுரிமை (kerakyatan Melayu) வழங்குதல்.
அதன் ஒன்பதாவது கொள்கை பின்வருமாறு : குடியுரிமைக்கு ‘மெலாயு மலாயா ‘ என்று பெயரிட வேண்டும்.
1948-ல், ஆங்கிலேயர்கள் அவசரநிலையை அறிவித்து, புத்ரா-ஏ.எம்.சி.ஜே.ஏ. கூட்டணியில் இருந்த அமைப்புகளைத் தடை செய்தபோது, மக்கள் அரசியலமைப்பு அடக்கம் செய்யப்பட்டது.
இன்று இயற்றப்பட்டிருக்கும் மத்திய அரசியலமைப்பு, இங்கிலாந்தின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி லார்ட் வில்லியம் ரீட் எனும் அதன் தலைவரின் பெயர் சூட்டப்பட்ட, ஓர் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டது.
ரீட் கமிஷன் முன்மொழிவு, ஜூன் 1957-ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆகஸ்ட் 31 சுதந்திரத்திற்குப் பிறகு, அது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
சிங்கப்பூர், மலாயா, சபா மற்றும் சரவாக் ஆகியவற்றுடன் இணைந்து, ‘மலேசியா’ உருவானபோது, மத்திய அரசியலமைப்பு மலேசிய அரசியலமைப்பு என்று திருத்தப்பட்டது.