சுகாதார அமைச்சு இன்று, 2,335 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, இது நாட்டில் பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
முந்தைய அதிகப் பதிவு, டிசம்பர் 10-ம் தேதி, 2,234 எனப் பதிவானது.
கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் ஜொகூர் ஆகிய இடங்களில் தொற்றுநோய்கள் அதிகரித்துள்ளதால் இன்றைய பதிவுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
அதேவேளையில், இன்று 874 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று சண்டகானில் ஒரு பெண்மணியும் (44 வயது), மலாக்காவில் ஓர் ஆணும் (70 வயது) மரணமடைந்தனர். இதுவரை நாட்டில் மொத்தம் 451 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
திரெங்கானுவில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
கோலாலம்பூரில் 728, சிலாங்கூரில் 710, ஜொகூரில் 412, சபாவில் 248, பினாங்கில் 58, கிளந்தானில் 54, நெகிரி செம்பிலான் 33, பேராக்கில் 26, பஹாங்கில் 19, கெடா மற்றும் லாபுவானில் தலா 16, சரவாக்கில் 6, மலாக்காவில் 5, புத்ராஜெயாவில் 3, பெர்லிஸில் 1.
மேலும் இன்று, 11 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
ஜாலான் செங் கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், தித்திவங்சா மாவட்டம்; பாகார் சிப்புட் திரளை – ஜொகூர், கோத்த திங்கி மாவட்டம்; பிளாஸ்திக் சுபாங் திரளை – சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங் மாவட்டங்கள்; ஹல்பான் திரளை – கிளந்தான், கோத்த பாரு மாவட்டம்; லிஸ் பூத்தே திரளை – பினாங்கு, பாராட் டாயா மாவட்டம்; செந்தோசா ரெசிடன்சி திரளை – பினாங்கு, தீமோர் லாவுட், பாராட் டாயா, வட செப்ராங் பிறை, மத்திய செப்ராங் பிறை மாவட்டங்கள்; செரகாம் செப்பா திரளை – கிளந்தான், கோத்தா பாரு, பாச்சோக் & தும்பாட் மாவட்டாங்கள்; பாகார் பெந்தோங் திரளை – பஹாங், பெந்தோங் மாவட்டம்; ஜாலான் ஆசாம் திரளை – சிலாங்கூர், பெட்டாலிங், கிள்ளான் மாவட்டங்கள்; சுங்கை ரெடான் திரளை – ஜொகூர், குளுவாங், கோத்த திங்கி மாவட்டங்கள்; செமம்பூ திரளை – பஹாங், குவாந்தான் மாவட்டம்.