‘முனைமுகப் பணியாளர்களை ஏமாற்றாதீர்கள், துன்புறுத்தாதீர்கள்’ – டாக்டர் நூர் ஹிஷாம்

நாட்டின், முனைமுகப் பணியாளர்களின் சுகாதார நிலை குறித்து பொய் சொல்ல வேண்டாம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்தார்.

டோமோகிராபி’’ (சி.டி. ஸ்கேன்) செய்வதற்கு முன்னர், தனது அறிகுறிகளைத் தெரிவிக்காத ஒரு நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததனால், தனக்குத் தற்போது கோவிட் -19 தொற்று பரவியுள்ளது என்று ஜொகூரைச் சார்ந்த ஒரு மருத்துவர் பகிர்ந்துகொண்ட தகவல் தொடர்பில் நூர் ஹிஷாம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

முனைமுகப் பணியாளர்களின் உரிமைகள் குறித்து நூர் ஹிஷாம் மக்களுக்கு நினைவூட்டினார்.

“முன்னணி பணியில் இருப்பவர்களை ஏமாற்ற வேண்டாம். நாங்களும் பாதுகாக்கப்பட வேண்டும், எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது, நண்பர்கள் உள்ளனர். முன்னணி பணியில் இருப்பவர்களைத் துன்புறுத்த வேண்டாம்,” என்று நூர் ஹிஷாம் இன்று தனது முகநூல் எழுதினார்.

நூர் ஹிஷாம் கூற்றுப்படி, கோவிட் -19 தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லாமல் மருத்துவமனைக்கு வந்த ஒரு நோயாளிகளுக்கு சி.டி. ஸ்கேன் செய்ய அம்மருத்துவர் நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், சி.டி. ஸ்கேன் மூலம் அவரது நுரையீரலில் கோவிட் -19 தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதைக் காட்டிய பின்னரே, ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததை நோயாளி ஒப்புக்கொண்டதாக மருத்துவர் கூறினார்.

“அவரது நடவடிக்கைகள் மற்றவர்களுக்குத் தொந்தரவாக மாறிவிடும். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது,” என்று மருத்துவர் கூறினார்.

நோயாளியுடன் சுமார் 15 நிமிடங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும், எஸ்ஓபி-யைப் பின்பற்றியதாகவும் அவர் கூறினார்.

கடந்த செவ்வாயன்று, மொத்தம் 1,880 சுகாதார ஊழியர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.

கடந்த வாரம், கிள்ளான், தெங்கு அம்புவான் இரஹிமா மருத்துவமனை, செர்டாங் மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை, கோலாலம்பூர் மருத்துவமனை, அம்பாங் மருத்துவமனை மற்றும் செலயாங் மருத்துவமனை ஆகியவற்றின் சுகாதார ஊழியர்களிடையே இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

டிசம்பர் 18-ம் தேதி, மருத்துவமனையில் 280 ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், நாடு முழுவதும் 1,697 சுகாதார ஊழியர்கள் வீட்டிலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலோ கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை உத்தரவுகளுக்கு (எச்.எஸ்.ஓ.) உட்பட்டுள்ளனர் என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.