சுகாதார அமைச்சு இன்று, 1,196 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது.
கோலாலம்பூர், சிலாங்கூர், சபா மற்றும் ஜொகூர் ஆகிய இடங்களில் 100-க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
அதேவேளையில், 997 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று, சபா, கோத்த கினபாலுவில் 71 வயது நிரம்பிய முதியவர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 392, கோலாலம்பூரில் 202, ஜொகூரில் 194, சபாவில் 186, நெகிரி செம்பிலான் 39, பினாங்கில் 37, கிளந்தானில் 31, பேராக்கில் 30, கெடாவில் 27, மலாக்காவில் 23, லாபுவானில் 12, பஹாங்கில் 9, புத்ராஜெயாவில் 6, திரெங்கானுவில் 5, சரவாக்கில் 3.
இன்று, சபா மாநிலத்தில், தாவாவ் & கலாபகான் மாவட்டங்களை உள்ளடக்கிய ஜாலான் செட்கோ எனும் ஒரு புதியத் திரளை கண்டறியப்பட்டுள்ளது.