சிலாங்கூர், சபா, ஜொகூர் மற்றும் கோலாலம்பூரில் அதிகரித்துவரும் நேர்வுகளால், இன்று 1,741 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகி உள்ளன என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
மூலும் இன்று, இத்தொற்றுநோயால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 500-ஐ தாண்டியது.
அதேவேளையில், இன்று 1,010 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 53 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. எழுவர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 687, சபாவில் 303, ஜொகூரில் 295, கோலாலம்பூரில் 150, நெகிரி செம்பிலான் 56, பினாங்கில் 55, கிளந்தானில் 50, கெடாவில் 45, மலாக்கா மற்றும் பேராக்கில் 34, பஹாங்கில் 12, , சரவாக்கில் 8, புத்ராஜெயாவில் 6, பெர்லிஸ் மற்றும் லாபுவானில் தலா 1.
மேலும் இன்று, 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.