சுகாதார அமைச்சு இன்று, 2,027 புதியக் கோவிட் -19 நேர்வுகளையும் 8 மரணங்களையும் பதிவு செய்துள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகள் (41.5 விழுக்காடு) பதிவாகியுள்ளன, அதனை அடுத்து, ஜொகூரில் (21.1 விழுக்காடு), சபாவில் (18.9 விழுக்காடு) என புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
அதேவேளையில், 1,221 நோயாளிகள் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 52 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று, சபா, லாஹாட் டத்துவில் மூவர், கோத்த கினபாலு மற்றும் சண்டகானில் தலா ஒருவர், கிள்ளானில் இருவர், ஈப்போவில் ஒருவர் என எண்மர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 509, ஜொகூரில் 428, சபாவில் 383, கோலாலம்பூரில் 313, நெகிரி செம்பிலானில் 98, பினாங்கில் 60, கெடாவில் 47, கிளந்தானில் 42, லாபுவானில் 37, பேராக் மற்றும் பஹாங்கில் தலா 25, மலாக்காவில் 21, திரெங்கானு, சரவாக் மற்றும் புத்ராஜெயாவில் தலா 13.
மேலும் இன்று, 11 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
சிலாங்கூரில் 4 – புக்கிட் அங்காட் திரளை, ஶ்ரீ சூரியா திரளை, புக்கிட் செமிஞ்சே கட்டுமானத் தளத் திரளை & ஜாலான் பிளாயார் திரளை; கோலாலம்பூரில் 2 – ஜாலான் டேசா கட்டுமானத் தளத் திரளை, ஜாலான் ராஜா திரளை; ஜொகூரில் 1 – பாரிட் ஜாமில் திரளை; சபாவில் 1 – தொம்போவோ திரளை; பஹாங்கில் 1 – லங்கிட் செலாத்தான் திரளை; திரெங்கானுவில் 1 – மெங்குவாங் திரளை; சரவாக்கில் 1 – பா சாயாப் திரளை.